மெசிடோ நிறுவனம் உலர் உணவு பொதிகளை உவந்தளித்தது

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (MSEDO) பணிப்பாளர் திரு யாட்சன் பிகிராடோ அவர்களின் பணிப்பில் அந் நிறுவனத்தின் உத்தியோகத்தர்களால் வியாழக்கிழமை (23.12.2021) அன்று 2600 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இந் நன்கொடை, அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக தொழில் வாய்ப்பினை இழந்த தலைமன்னார், ஒலைத்தொடுவாய், சாந்திபுரம், ஜிம்ரோன்நகர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கும் அதிகூடிய வறுமைக்கோட்டின் கீழ் உள்ள தெரிவுசெய்யப்பட்ட140 குடும்பங்களுக்கு 2600 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மன்னார் நகர உதவி திட்டப் பணிப்பாளர் திரு றொகான் அவர்களும், குறித்த பகுதிகளை சார்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் நன்கொடை நிகழ்வில் கலந்துகொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மெசிடோ நிறுவனம் உலர் உணவு பொதிகளை உவந்தளித்தது

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House