
posted 12th December 2021
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரைக்கான பங்களிப்பு மூலோபாயத்திட்டத்தினை உருவாக்கல் தொடர்பான, பங்குதாரர்களுடனான கலந்துரையாடல்கள், அம்பாறை மாவட்டத்தில் தமிழ், சிங்கள மொழிகளில் இடம் பெற்றுள்ளன.
அம்பாறை மாவட்ட தேர்தல்கள் அலுவலக, மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.பீ.எம்.சுபியானின் ஏற்பாட்டில், அம்பாறை பிரதேச செயலக மண்டபத்தில் சிங்கள மொழி மூலமும்,
நிந்தவூர் பிரதேச செயலக மண்டபத்தில் தமிழ் மொழி மூலமும் இந்த பங்குதாரர்களுடனான கலந்துரையாடல்கள் இடம்பெற்றபோது ஆர்வத்துடன் பெருந்தொகையானோர் கலந்து கொண்டு கருத்துக்களையும் வெளிப்படுத்தினர்.
இதன்போது மாவட்ட தரப்புக்குழுவினரான பங்குதாரர்களாக அரசியல் கட்சி முகவர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள், கிராமமட்ட பெண்கள் மற்றும் இளைஞர் அமைப்பினர், பல்கலைக்கழக மாணவர்கள், ஓய்வு பெற்ற அரச உத்தியோத்தர்கள், சர்வமதத்தலைவர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் சில தரப்பினரும் கலந்து கொண்டு பயனுள்ள பல கருத்துக்களையும் முன்வைத்தனர்.
இந்த கலந்துரையாடல்கள் மூலம் பெறப்பட்ட மாவட்ட தரப்புக்குழுவினரின் கருத்துக்கள், இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரைக்கான பங்களிப்பு மூலோபாயத்திட்டத்தினை உருவாக்கும் போது உள்வாங்கப்படவுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சுபியான் தெரிவித்தார்.
இதேவேளை நிந்தவூர் பிரதேச செயலக மண்டபத்தில் தமிழ்மொழி மூலமான கலந்துரையாடல் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் திணைக்கள சிரேஷ்ட உத்தியோகத்தர் எம்.பி.அப்துலாவின் வரவேற்றுபுரையுடனும், சிரேஷ்ட உத்தியோத்தர் ஜே.ஜே.பி.தினேஷ் மற்றும் உத்தியோகத்தர்களின் பங்கு பற்றுதலுடனும் வெற்றிகரமாக இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் தலைமை உரையாற்றிய அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் பின்வருமாறு கூறினார்.
“ஜனநாயக நாடொன்றில் மக்கள் விரும்பும் நீதியானதும், நியாயமானதுமான தேர்தல் ஒன்றினை நடத்துவது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் 2022 – 2025 ஆம் ஆண்டுக்கான பங்களிப்பு மூலோபாயத்திட்டத்தினை உருவாக்கல் தொடர்பான இத்தகைய கலந்துரையாடல்கள் நாடளாவிய ரீதியில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மாவட்ட மட்டத்தில் இடம்பெற்று வருகின்றன.
இதன் மூலம் தேசிய அளவிலான கொள்கை வகுக்கப்படவிருக்கின்றது” என்றார்.

எ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House