
posted 22nd December 2021
சாய்ந்தமருது பிரதேசத்தை மையப்படுத்தி இயங்கி வருகின்ற இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்ததுடன் அமைப்பின் செயற்பாட்டாளர்களும் மற்றும் பல பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வில் 2022/2023 ஆம் வருடத்திற்காகாக 11 பேர் கொண்ட முகாமைத்துவ சபை தெரிவு செய்யப்பட்டதுடன் அமைப்பின் ஏற்பாட்டாளராக ஏ.எம்.ஆஷிக், செயலாளராக ஏ.எம்.எம்.ஸாஹிர், பிரதி செயலாளர்களாக பொறியியலாளர் எம்.சி.கே.நிஷாத் மற்றும் எம்.ஐ.சர்ஜூன், பொருளாளராக ஆர்.எம்.ஹனீஸ், ஊடக இணைப்பாளராக யூ.கே.காலித்தீன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுடன் வைத்தியர் என்.ஆரிப், ஏ.எஸ்.அஸ்வர், ஏ.எச்.எம்.றிபாய், எம்.எஸ்.எம்.ஸபான் மற்றும் எம்.எம்.உதுமாலெப்பை ஆகியோர் முகாமைத்துவ சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
மருதூர் சதுக்கத்தின் பராமரிப்புக்கும் அங்கு நடப்பட்டுள்ள மரங்களுக்கும் எவ்வித ஊதியமும் பெறமால் தன்னார்வத்துடன் உதவி வருகின்ற இருவருக்கு இந்நிகழ்வில் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இயற்கையை நேசிக்கும் மன்றம் ஸ்ரீலங்கா எனும் இந்த அமைப்பு ஒரு சமுதாய அடிப்படையிலான தன்னார்வ அமைப்பாகும். இவ்வமைப்பு சுற்றுச்சூழல் மற்றும் அது தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, மாணவர்கள் மற்றும் தன்னார்வ செயற்பாட்டளார்களை விழிப்புணர்வூட்டல், ஊக்குவித்தல் மற்றும் இயற்கை பற்றிய கல்வியூட்டல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.
இவ்வமைப்பானது கல்முனை மாநகர சபையுடன் இணைந்து, சாய்ந்தமருது பிரதேத்தில் தின்மக் கழிவகற்றல் செயற்பாடுகள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House