
posted 6th December 2021
முல்லைத்தீவு - சிலாவத்தை - தீர்த்தக்கரை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8. 30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த இரு பெண்கள் முல்லைத்தீவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துமவனைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
வெள்ளிக்கிழமை இரவு மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரம் 7 பேர் கொண்ட கும்பல் அந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டிலிருந்த பொருட்கள் மீது தாக்குதல் நடத்தியது. இவர்களின் தாக்குதலில் அங்கிருந்த வயதான பெண் ஒருவர் தலையில் காயமடைந்தார்.
இதன் பின்னர் 16 வயது சிறுமியை வீட்டின் வெளியே இந்தக் கும்பல் இழுத்துச் செல்ல முயன்றபோது 13 வயது சிறுமி அவர்கள் மீது மிளகாய்த்தூளை வீசி தனது சகோதரியை காப்பாற்றினார்.
வீட்டிலிருந்தவர்கள் அவசர நோயாளர் பிரிவுக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் அங்கு வந்த அம்புலன்ஸ் காயமடைந்தவர்களை முல்லைத்தீவு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. இதில் படுகாயமடைந்த இருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 119 பொலிஸ் சேவையினருக்கு தகவல் அளித்தபோதும், குறித்த கும்பல்மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இது விடயத்தில் உரியவர்கள் தலையிட்டு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களும் அந்தப் பகுதி மக்களும் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House