
posted 31st December 2021
நயினா தீவு வடக்கு பகுதியில் இன்று வியாழக்கிழமை மாலை வீசிய மினி சூறாவளி தாக்கத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என் சூரிய ராஜா தெரிவித்தார்
யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று காலையிலிருந்து மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்ற நிலையில் இன்று மாலை வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நயினாதீவு வடக்கு ஜே 35 கிராம சேவகர் பிரிவில்வீசியமினி சூறாவளியின் தாக்கத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும்தெரிவித்தார்
மேலும் சேத விபரங்கள் தொடர்பில் குறித்த பிரதேச செயலகத்தினூடாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு கொழும்பு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House