மயக்கம் தரும் வர்த்தமானி அறிவித்தல்

இந்த நாட்டின் ஒரு முக்கியமானது வர்த்தமானி அறிவித்தலாகும். இந்த வர்த்தமானியின் அறிவித்தலைக் கொண்டே நான் எனது மன்னார் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர் பதவிகளைத் துறந்தேன். அவ்வாறே, இவ் வர்த்தமானி அறிவித்தலைக் கொண்டே மீண்டும் எனது பதவிகளைப் பொறுப்பேற்றேன். ஆனால், எங்கள் சபையின் ஒரு குழுவினருக்கு தவிசாளர் யார் என்ற மயக்க நிலையில் அமர்வில் கலந்துகொள்ளாது வெளிநடப்பு செய்வது வியப்பாக இருக்கின்றது என மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹீர் தெரிவித்தார்.

14.12.2021 அன்று மன்னார் பிரதேச சபையின் 43 வது அமர்வு தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹீர் தலைமையில் நடைபெற்றபோது இலங்கை தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியினருமாக 9 உறுப்பினர்கள் இவ் அமர்வின்போது யார் இச் சபையின் தலைவர் என்ற மயக்கமாக இருக்கின்றது என தெரிவித்து வெளிநடப்பு செய்தார்கள்.

இது தொடர்பாக மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹீரிடம் வினவியபோது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;

வர்த்தமானி மூலம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 13.9.2021 அன்றிலிருந்து, எனது மன்னார் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர் பதவியிருந்து வடக்கு மாகாண ஆளுநாரால் நீக்கப்பட்டேன்.

நான் பதவியிலிருந்து நீக்கப்பட்டபோது எனக்கு வடக்கு மாகான உள்ளுராட்சி ஆணையாளரோ அல்லது மன்னார் மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளரோ எனது பதவி நீக்கல் தொடர்பாக எந்தவித கடிதங்களை அனுப்பப்படவில்லை. இருந்தும் இதுவிடயமாக வெளிவந்த வர்த்தமானியின் அறிவித்தலைக்கொண்டே நான் எனது பதவிகளைத் துறந்தேன்.

இதேபோன்று 9.11.2021 அன்று வர்த்தமானியில் மீண்டும் நான் மன்னார் பிரதேச சபை தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எந்த வர்த்தமானி அறிவித்தலைக் கொண்டு நான் எனது பதவிகளை துறந்தேனோ, அதே வர்த்தமானி அறிவுறுத்தலைக் கொண்டுதான் மீண்டும் எனது பதவிகளை பொறுப்பேற்றேன்.

நான் பதிவியிலிருந்து நீக்கப்பட்டதும் 29.10.2021 அன்று இப் பிரதேச சபைக்கு தவிசாளர் பதவி வெற்றிடத்திற்கு தெரிவு இடம்பெற்றது.

இத் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஈபிடிபி கட்சி உறுப்பினரும் மற்றும் உதயன் சூரியன் கட்சியைச் சார்ந்த உறுப்பினரும் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினரான எம்.ஐ.எம்.இஸ்ஸதீன் என்பவருக்கு வாக்களித்து அவரை தவிசாளராக தெரிவு செய்தார்கள்.

இத் தெரிவிற்கு அன்று உச்ச நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டதுமல்லாமல் இத் தெரிவை வர்தமானியில் பிரசுரிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் தெரிவு செய்யப்பட்ட புதிய தவிசாளரை முன்னையது போன்று உப தவிசாளராகவே இருக்கும்படியும் மன்னார் பிரதேச சபை செயலாளருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் 14.12.2021 அன்று நடைபெற்ற இப் பிரதேச அமர்வில், அன்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினரான எம்.ஐ.எம்.இஸ்ஸதீனுக்கு வாக்களித்த யாவரும் இவ் அமர்வில் கலந்து கொண்ட வேளையில், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினரான எம்.ஐ.எம்.இஸ்ஸதீனுக்கு அன்று எதிர்த்து வாக்களித்தவர்களுடன் இணைந்து இஸ்ஸதீனும் வெளிநடப்பு செய்துள்ளார்.

இந்த நாட்டில் வர்த்தமானி அறிவித்தல் என்பது அரசாங்கத்தின் சட்டபூர்வமான ஒரு அறிவித்தல் படிவமாகும். இவ்வாறான முக்கியமான இந்த அரசாங்கப் படிவத்தில் நம்பிக்கை கொள்ளாத தன்மை கவலைக்குரியதாகும்.

22.11.2021 அன்று நடந்த அமர்விலும் இவ்வாறே இக் குழுவினர் வெளியேறினார்கள். அவ்வாறு 14.12.2021 அன்றும் மயக்கத்துடனே வெளியேறுவதாக தெரிவித்துள்ளனர்.

இவர்களின் இச்செயல்முறைகள் அரசியல் பழிவாங்கும் தன்மை போன்று தோன்றுகின்றது.

நான் எனது இந்த பதவி காலத்தில் இனம், மதம், கட்சி வேறுபாடுகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு, அனைத்து இன மக்களையும் ஒரே பார்வையில் வைத்துக் கொண்டே அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வந்தேன், வருகின்றேன்.

அதாவது மன்னார் பிரதேச சபைக்கு உட்பட்ட 83 கிராமங்களுக்கும் 34 கிராம அலுவலகர் பிரிவுகளுக்கும் நான் ஒரு பொறுப்பு வாய்ந்த ஒரு தவிசாளராகவே இருந்து செயல்பட்டேன் தொடர்ந்து செயல்படுகின்றேன் என தெரிவித்தார்.

மயக்கம் தரும் வர்த்தமானி அறிவித்தல்

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House