
posted 7th December 2021
திங்கள் கிழமை (6.12.2021) மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் 15 பேர் என பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மார்கழி மாதம் நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது என மன்னார் பிராந்திய சேவைகள் பணிப்பாளரின் நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில்,
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் 9 பேரும்
பெரியபண்டிவிரிச்சான் வைத்திசாலையில் 2 பேரும்
நானாட்டான் வைத்தியசாலையில் ஒருவரும்
சிலாவத்துறை வைத்தியசாலையில் ஒருவரும்
பேசாலை வைத்தியசாலையில் ஒருவரும்
முருங்கன் வைத்தியசாலைகளில் ஒருவருமாக மொத்தம் 15 நோயாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள்
இதுவரை மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் தொகை 3005 ஆக உயர்ந்திருக்கையில் கொரோனாவால் மரணித்தவர்களின் தொகை 29 ஆக உள்ளதென அறிக்கை கூறுகின்றது.
அறிக்கையின்படி தடுப்பூசி போட்டவர்களின் விபரங்கள்;
முதலாவது தடுப்பூசி 81, 099 பேருக்கும்
இரண்டாவது தடுப்பூசி 75,033 பேருக்கும்
பூஸ்டர் தடுப்பூசி 3075 பேருக்கும்
பாடசாலை மாணவர்களுக்கு 5652 பேருக்கும்
பாடசாலையிலிருந்து இடை விலகல் (குறிப்பிட்ட வயதுடையவர்களுக்கு) 1188 ஆகும்.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House