
posted 8th December 2021
மன்னார் திருக்கேதீஸவரத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் தங்கி பாடசாலைகளுக்கு சென்றுவரும் மாணவர்கள் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையால், இவர்கள் தங்கி வாழும் இடத்தின் ஒரு பகுதியில் சிகிச்சைக்கு உட்பட்டு வருகின்றனர் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் இவ்வாறு தெரிவித்தார்.
புதன்கிழமை (8.12.2021) பணிப்பாளர் ரி.வினோதன் தனது பணி மனையில் நடாத்திய ஊடகச் சந்திப்பின்போது மேலும் தெரிவிக்கையில்;
மன்னார் மாவட்டத்தில் செவ்வாய்கிழமை (7.12.2021) மேலும் 46 பேர் கொவிட் தொற்றோடு அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 29 பேர் திருக்கேதீஸ்வரத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்து பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களாகவும், பல்கலைக்கழக மாணவர்களுமாகவும் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் தாங்கள் தங்கியிருந்த விடுதியிலேயே தொடர்ந்தும் ஒரு பகுதியில் தங்கவைக்கப்பட்டு இவர்களுக்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
இவர்களோடு சேர்ந்து இந்த மாதம் (டிசம்பர்) 118 பேர் கொவிட் தொற்றோடு இனம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில், கொரொனா ஆரம்பமான காலம் தொடக்கம் இதுவரை 3058 பேரும் கொவிட் தொற்றாளர்களாகவும், இந்த வருடம் மட்டும் மொத்தமாக 3041 கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மூன்றாவது தடுப்பூசி வழங்கல் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது.
ஆனால் முதல் இரு தடுப்பூசி பெறுவதில் இவர்கள் காட்டிய ஆர்வம் மூன்றாவது தடுப்பூசி போடுவதில் காட்டிவரும் ஆர்வம் மிக குறைவாக காணப்படுகின்றது.
கடந்த இரு தடுப்பூசியாக பைசல் மற்றும் சினோபாம் தடுப்பூகள் போட்டவர்கள் மூன்று மாதங்கள் கடந்துள்ளதால் இவர்கள் கட்டாயமாக மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டர் போடப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளுகின்றோம்.
அத்துடன், மன்னார் மாவட்டத்தில் கொரோனாவினால் இறந்தவர்கள் தொகை மாறாமல் 29 ஆகவே இருக்கின்றது.
ஆனால், மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது டெங்கு தீவிரமாக பரவி வருகின்றது. குறிப்பாக தற்பொழுது மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் பனங்கட்டுகொட்டு. பெரியகடை, சின்னக்கடை, மூர்வீதி, தோட்டவெளி மற்றும் பேசாலை பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை இந்த வருடம் மொத்தமாக 83 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை நவம்பர் மாதம் 26 பேரும், டிசம்பர் மாதம் இன்றுவரை 27 பேரும் டெங்கு நோய்க்கு ஆளாகியுள்ளார்கள்.
எனவே, அனைவரும் டெங்கு நோயிலிருந்து தப்பித்துக் கொள்ள நுளம்பு பெருகக்கூடிய இடங்களை கண்டுபிடித்து அவற்றை அழிப்பது அல்லது சுத்திகரிப்பது போன்ற இலகுவான முறைகளைப் பாவிக்கலாம்.
இவற்றை ஒவ்வொருவரும் கட்டாயமாக செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
இது தொடர்பாக மன்னார் மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் கூட்டங்கள் நாடாத்தி அவ்வப்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
அத்துடன், நத்தார் பண்டிகைக் காலமானதால், மக்களின் நடமாட்டம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதால், அனைவரும் வழமை போல சுகாதார வழிமுறைகளை மிகவும் அவதானத்துடன் வழமைபோன்று கடைப்பிடிக்கும் படியாகக் கேட்டுக்கொள்ளப் படுகின்றீர்கள்.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House