மன்னாரில் கொவிட் தடுப்பூசி நிபந்தனையை பூர்த்தி செய்யாதோர் தொழில்களில் ஈடுபட அனுமதி மறுக்கப்படும். | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மன்னார் பகுதியில் கொரோனா தடுப்பூசிகள் பெறாதவர்கள் புதன்கிழமைக்கு (15.12.2021) முன் தங்கள் தடுப்பூசிகளை போட்டிருக்க வேண்டும். அன்றேல் இவர்கள் தொழில்களில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மன்னார் மாவட்ட சுகாதார பகுதினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பகுதியில் முருங்கன் முசலி பகுதிகளில் வியாபார நடவடிக்கை, பொதுப்போக்குவரத்து, வாடகை போக்குவரத்து, சந்தை வியாபாரங்களில் ஈடுபடும் சகல 30 வயதுக்கு மேற்பட்டோர் மூன்று தடுப்பூசிகளைனயும் ஏனையோர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருத்தல் அவசியமானது.

புதன்கிழமைக்கு (15.12.2021) முதல் இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாதவர்கள் தொழில்களில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மன்னார் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை பிரஜைகள் எவரும் திங்கள் கிழமை (13.12.2021) முருங்கன் சுகாதார வைத்திய அலுவலகத்தில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மேலும் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி விடுத்துள்ள வேண்டுகோளில் கடந்த காலங்களில் சினோபாம், கொவிஷீல்ட் மற்றும் பைஸர் வகை தடப்பூசியினைப் பெற்றுக்கொண்டவர்களில் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டு 3 மாதங்களை பூர்த்தி செய்திருப்பின் மேலதிக வலுவூட்டல் பூஸ்டர் தடுப்பூசியானது திங்கள்கிழமை (13.12.2021) காலை 8 மணி தொடக்கம் நண்பகல் 1 மணி வரை முருங்கனில் அமைந்துள்ள நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சினோபாம் முதலாம் இரண்டாம் தடுப்பூசியும் பைஸர் இரண்டாவது தடுப்பூசியும் மற்றும் 20 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் பாடசாலை இடைவிலகியவர்களுக்குமான பைஸர் தடுப்பூசியும் இச்சந்தர்ப்பத்தில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் கொவிட் தடுப்பூசி நிபந்தனையை பூர்த்தி செய்யாதோர் தொழில்களில் ஈடுபட அனுமதி மறுக்கப்படும். | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House