மதுபோதையேறிய இளைஞர் குழு அருட்தந்தையர்களின் காரினை உடைத்தனர் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிளிநொச்சி - மயில்வாகனபுரத்தில் நத்தார் நிகழ்வு முடிந்து பயணித்த அருட்தந்தையர்களின் கார் வீதியில் மறிக்கப்பட்டு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை இரவு நத்தார் ஒன்று கூடல் நிகழ்வு முடித்து அதில் கலந்துகொண்ட ஏழு அருட்தந்தையர்களில் ஒருவரை தவிர ஏனையவர்கள் தங்களின் அருட்தந்தையர்களுக்குரிய ஆடைகளுடன் கார் ஒன்றில் திரும்பிக்கொண்டிருந்தபோது சுமார் 10 பேர் கொண்ட இளைஞர் குழுவொன்று மதுபோதையில் மயில்வாகனபுரத்தில் காரை வீதியில் மறித்து அருட்தந்தையர்களிடம் பணம் கோரியுள்ளது.

இதற்கு அருட்தந்தையர்கள் மறுப்புத் தெரிவித்தபோது அவர்கள் பயணித்த வாகனம் அடித்து உடைக்கப்பட்டதோடு, அருட்தந்தையர்கள் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், தற்போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

மதுபோதையேறிய இளைஞர் குழு அருட்தந்தையர்களின் காரினை உடைத்தனர் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House