மண் ஏற்றிவந்த கன்டர் ரக வாகனம்  தடம் புரண்டது

விசேட அதிரடிப்படையினரின் பிடியிலிருந்து தப்புவதற்காக தலைதெறிக்க ஓடிய கன்ரர் ரக வாகனம் தலைகீழாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

வெள்ளிக்கிழமை(10) காலை வடமராட்சி, வல்லிபுரம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றிவந்த கன்டர் ரக வாகனத்தை விசேட அதிரடிப்படையினர் மறிக்க முற்பட்டபோது கன்டர் வாகனம் வேகமாக தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில் வல்லிபுரம் பகுதியில் தொலைத்தொடர்பு கம்பம் ஒன்றில் மோதியதுடன் தலைகீழாக புரண்டு நெல் வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. மண் கடத்தல்கரர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மண் ஏற்றிவந்த கன்டர் ரக வாகனம்  தடம் புரண்டது

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House