
posted 23rd December 2021
மன்னாரில் இடம்பெறுகின்ற வெளி நாடுகளால் இடம்பெற போகின்ற மணல் அகழ்வால் மன்னார் பெரும் அழிவுக்கு உள்ளாகபோகும் நிலை தோன்றியுள்ளது. இவற்றை தடுத்து நிறுத்துவதில் மன்னார் பிரஜைகள் குழு மக்கள் நலன்நோக்கி முன்னெடுப்பில் ஈடுபட்டு வருகின்றது. இதற்கு நாம் அனைவரும் இணைந்து பிரஜைகள் குழுவுக்கு கரம் கொடுக்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் பிரஜைகள் குழுவின் அங்கத்தவர்கள் வருட இறுதி ஒன்றுகூடலை புதன்கிழமை (22.12.2021) மன்னார் ஆஹாஸ் ஹொட்டலில் நடாத்தியது. இதில் மன்னார் மாவட்ட சகல திணைக்கள உயர் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை இதில் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றுகையில்;
மன்னார் மாவட்டத்தின் பிரஜைகள் குழுவின் ஆரம்ப காரணகத்தாவானவரும், தனது குருத்துவ வாழ்வில் வைரவிழா கதாநாயகனுமான அருப்பணி ஏ.சேவியர் குரூஸ் அடிகளாரை இப் பிரஜைகள் குழுவினர் அவருக்கு இன்றைய தினத்தில் முக்கியத்துவம் கொடுத்து வரவேற்றமைக்கு நன்றியும் பாராட்டையும் தெரிவித்து நிற்கின்றேன்.
அரசாங்க அதிகாரிகள் நீங்கள் இங்கு வீற்றிருக்கின்றீர்கள். உங்கள் கடமைகளும் ஒரு வரையறைக்குள்ளே இருக்கின்றது. இருந்தும் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் இப் பிரஜைகள் குழுவுக்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே எனது அவாவாக இருக்கின்றது.
இம் மாவட்டத்தின் அரசாங்க அதிபர், மேலதிக அரசு அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களின் ஒத்துழைப்பு பிரஜைகள் குழுவுக்கு மிக அவசியமானது.
அவ்வாறு இன்றைய நிலையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வினோதன் ஊடாகவும் மேலும் பல அதிகாரிகள் ஊடாக பிரஜைகள் குழு மக்களுக்கான தங்கள் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்ல வேண்டிய நிலையும் காணப்படுகின்றது.
இந்த பிரஜைகள் குழுவானது மக்களுக்காகவே உருவாக்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் மக்கள் பல தரப்பட்ட பிரச்சனைகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
இரண்டு வருடங்களாக மக்கள் ஒரு கொடிய நோயான கொவிட் 19 ஆல் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கையிலே சுகாதார பகுதினர் மன்னாரில் சரியான பாதையில் சென்று மக்களுக்கான சுகாதார நடைமுறைகளை முன்னெடுத்து வருவதால் பெரும் பாதிப்புக்கள் இல்லாது மக்கள் காப்பாற்றப்படுவதையிட்டு நாம் சுகாதார பகுதினருக்கு நன்றி தெரிவித்து நிற்கின்றோம்.
மேலும், எதிர்பாராத மழைவீழ்ச்சி, பயிரழிவு, அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வு, வேலையற்ற நிலை, பொருளாதார நெருக்கடிகள் இவ்வாறு பலவிதமான இன்னல்களினூடாக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கையிலே, வேறுபல காரணங்களை உதாரணம் காட்டி மணல் அகழ்வு நமது நிலத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையினை ஏலவே தடுத்து நிறுத்த பிரஜைகள் குழுவுடன் கைகோர்த்து நிற்க அனைவரும் ஒத்துளைக்க வேண்டும் என்பது எமது வேண்டுகோள்.
நாம் இன்று ஒன்றுகூடியிருப்பது மகிழ்ச்சியானது. நாம் அனைவரும் ஒரே சமூகமாக ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக இருக்க இவ்வொன்றுகூடல் வழிவகுத்துள்ளது என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House