போதை பொருள் மற்றும் எச்ஐவி (HIV) நோய்க்கு காரணமாவார்கள் இவர்கள் - வைத்திய நிபுணர் தக்ஷாயினி அருள்பிரசாத்
போதை பொருள் மற்றும் எச்ஐவி (HIV) நோய்க்கு காரணமாவார்கள் இவர்கள் - வைத்திய நிபுணர் தக்ஷாயினி அருள்பிரசாத்

வைத்திய நிபுணர் தக்ஷாயினி அருள்பிரசாத்

மன்னார் மாவட்டத்தை பொறுத்தமட்டில் இந்தியாவிலிருந்து வந்து செல்வோர் மற்றும் போதை பொருள் போன்றவை எச்ஐவி நோய்க்கு மிக சவாலா அமைகின்றது. ஆகவே இவ் நோயிலிருந்து விடுபடுவதற்கு சமூக மட்டத்திலுள்ள பெரியவர்கள் அதிகாரிகள் ஆகியோர் ஒத்துழைப்பு வழங்கி மன்னாரில் இந் நோய்க்கு உள்ளாகாமல் இருப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட பாலியல் சுகாதாரம் மற்றும் எச்.ஐ.வி (HIV) மருத்துவ விஷேட வைத்திய நிபுணர் தக்ஷாயினி அருள்பிரசாத் இவ்வாறு தெரிவித்தார்.

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தலைமையில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வியாழக்கிழமை (02.12.2021) காலை கருத்தரங்கு இடம்பெற்றது.

இக் கருத்தரங்கில் சுகாதார சேவைகள் திட்டமிடல் வைத்திய அதிகாரி டெனி, பாலியல் சிகிச்சை வைத்திய அதிகாரி நி.தயானி, சுகாதார சௌக்கிய பரிசோதகர் அன்பழகன், கல்வி திணைக்கள அதிகாரிகள் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் இது சம்பந்தமான திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட பாலியல் சுகாதாரம் மற்றும் எச.;ஐ.வி. மருத்துவ விஷேட வைத்திய நிபுணர் தக்ஷாயினி அருள்பிரசாத் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;

1988 லிருந்து உலக எயிட்ஸ் தினமானது ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படுகின்றது. இதற்கமைவாக இந்த வருடமும் நாம் இத் தினத்தை நினைவு கூறுகின்றோம்.
1981 இல் முதன்முதலாக உலகத்தில் எச்ஐவி நோயாளி கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1987 லிருந்து 2019 வரையான காலப்பகுதியில் 79.3 மில்லியன் மக்கள் எச்ஐவி நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 36.3 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயினால் இறந்துள்ளனர். 2020 இறுதியில் 37.7 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயினால் பீடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தற்பொழுது 1.5 மக்கள் இந் நோயினால் 2020 ஆம் ஆண்டு புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையை பொறுத்தமட்டில் 1986 இல் முதன்முதலாக வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரால் இந் நோய் இருந்ததாக அறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1987 இல் உள்நாட்டவர் இந் நோய்க்கு உள்ளாகியது கண்டு பிடிக்கப்பட்டது. 1987 தொடக்கம் 2020 வரையான காலப்பகுதியில் 3994 பேர் எச்ஐவி நோயாளர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 583 நபர்கள் இந் நோயினால் இறந்துள்ளனர். இவ்வாறு தொற்றாளர்களில் 93 சிறார்களும் அடங்குவர். மன்னார் மாவட்டத்தை பொறுத்தமட்டில் 2021 வரை 10 பேர் இந் நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு ஒருவர் இனம் காணப்பட்டதில் அவர் எய்ட்ஸ் தொற்றோடே இனம் காணப்பட்டவர்களாவார்.

ஒரு எயிட்ஸ் நோயாளி 2 வருடம் தொடக்கம் 10 வருடங்கள் வரை எவ்வித அறிகுறி இல்லாமல் ஒரு சாதாரண மனிதராகவே காணப்படுவார். இதன்பின் இவர்கள் இனம் காணப்பட்டபின் வைத்தியசாலையை நாடும்போது இவர்களை காப்பாற்றுவது கடினமானதாக இருக்கும். ஆகவேதான் இந் நோய் தொடர்பாக சந்தேகம் ஏற்படும்போதே இவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படல் வேண்டும்.

2020 இல் இலங்கையில் புதிய எச்ஐவி நோயாளராக 363 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை 2019 ஆம் ஆண்டு 439 பேர் இந் நோயாளராக இனம் காணப்பட்டிருந்தனர். இதன் அடிப்படையில் 17 வீதம் வீழ்ச்சிக்கு காரணம் என்னவென்றால் இந் நோய்க்கான பரிசோதனையில் எற்பட்ட வீழ்ச்சியே காரணமாகும். இதற்கு முக்கிய காரணம் கொவிட் தொற்றே ஆகும். அதாவது பயணத் தடை மக்கள் ஒன்றுகூட முடியாத நிலையாலேயே இவ் வீழ்ச்சி எற்பட்டது. இருந்தபோதும் எமது நிலையங்களில் நாங்கள் இவர்களுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தோம் வருகின்றோம்.

எச்ஐவி நோயாளர்கள் தங்களை அடையாளப்படுத்தவோ அல்லது வெளிப்படுத்தவோ தயக்கம் காட்டுகின்றனர். ஏனென்றால் இவர்களை சமூகம் ஏற்றுக்கொள்வதில் நிலவுகின்ற தயக்கமே காரணமாகும். இதனால்தான் பலர் இவற்றுக்கான சிகிச்சை பெறுவதில் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் இந் நோய் மேலும் பரவக்கூடிய வாய்ப்புக்கள் உருவாகின்றன.

ஆகவேதான் இவற்றை இல்லாமல் ஒழிக்க இந் நோய்க்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கு சமூகத்திலே சமத்துவம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அத்துடன் கலங்கப்படுத்துதல் பாகுபடுத்தல் என்பவற்றை சமூக மட்டத்தில் ஒழித்து கட்டுவதன் மூலமும் இவர்களை வைத்திய பரிசோதனைக்கு உள்ளாக்கும்போது இந் நோயை மட்டுபடுத்த முடியும். இதனால் தான் இவ் வருடம் சமத்துவமின்மையை ஒழிப்போம் பெருந் தொற்றை ஒழிப்போம். எயிட்சை ஒழிப்போம் என்ற கருப்பொருளில் இத் தினம் கொண்டாடப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தை பொறுத்தமட்டில் இந்தியாவிலிருந்து வந்து செல்வோர் மற்றும் போதை பொருள் போன்றவை எச்.ஐ.வி நோய்க்கு மிக சவாலாக அமைகின்றது.

ஆகவே இந் நோயிலிருந்து விடுபடுவதற்கு சமூக மட்டத்திலுள்ள பெரியவர்கள், அதிகாரிகள் ஆகியோர் ஒத்துழைப்பு வழங்கி மன்னாரில் இந் நோய்க்கு உள்ளாகாமல் இருப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என நாம் கேட்டு நிற்கின்றோம் என்றார்.

போதை பொருள் மற்றும் எச்ஐவி (HIV) நோய்க்கு காரணமாவார்கள் இவர்கள் - வைத்திய நிபுணர் தக்ஷாயினி அருள்பிரசாத்

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House