பொலிஸாருக்கு அனுதாபம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸாருக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் 45ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று முன்தினம் புதன்கிழமை (29) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றபோதே இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சந்திரசேகரம் இராஜன் இப்பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றினார். மேற்படி சம்பவத்தில் உயிரிழந்த 04 பொலிஸாரில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் எமது பாண்டிருப்பு பிரதேசத்தை சேர்ந்த நவீனன் எனும் இளைஞன் மிகவும் துடிப்புள்ள, சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்த ஒருவர் எனவும், இவரது இழப்பு என்பது எவராலும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறே ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த அப்துல் காதர் எனும் பொலிஸ் உத்தியோகத்தரும் சமூகத்தின் நன்மதிப்பை பெற்றிருந்த ஒருவர் எனவும், மேலும் இரண்டு சிங்கள பொலிஸார் உட்பட இந்நால்வரின் குடும்பத்தினரும் இவர்களின் இழப்பினால் துன்புற்று அவஸ்தைப்பட்டதை நேரடியாகக் கண்டு மிகவும் கவலையடைந்துள்ளேன் எனவும் உறுப்பினர் இராஜன் இதன்போது குறிப்பிட்டார்.

இந்த அனுதாபப் பிரேரணையை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன், அழகக்கோன் விஜயரட்ணம் ஆகியோர் வழிமொழிந்து ஆதரித்தனர்.

இதையடுத்து இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்படுவதாக அறிவித்த மாநகர முதலவர் ஏ.எம்.றகீப், இந்த அனுதாபத் தீர்மானத்தை குறித்த சம்பவத்தில் உயிர்நீத்த நான்கு பொலிஸாரினதும் குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்குமாறு சபைச் செயலாளரை அறிவுறுத்தினார்.

பொலிஸாருக்கு அனுதாபம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House