பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ்வின் உரை

கிழக்கின் வாழ்வியல் அனுபவங்களை மிக நுட்பமான முறையில் இருட்டடிப்பு எதுவும் செய்யாமல் நூறு சிறுகதைகளை தொகுத்தன் மூலம் உமாவரதராஜன் கோட்பாட்டு தெளிவுமிக்க தீவிர ஆய்வாளராக புலப்படுகின்றார்.

இவர் ஆண் பெண் பேதமின்றியும் தமிழ் முஸ்லிம் என்ற வேறுபாட்டை உணர்த்தாமலும் இடதுசாரி வலதுசாரி என்கின்ற வகைக்குள் அகப்படாமலும் நவீனம் பின் நவீனத்துவம் என்கின்ற கோட்பாடுகளுக்குள் நிற்காது தமிழ் முஸ்லிம் படைப்பாளிகளை சமத்துவமாக நோக்கி நல்லதொரு ஆவணத்தை கிழக்கின் நூறு சிறுகதைகள் தொகுப்புக்கான தொகுப்பாளராகவிருந்து திறம்பட செயற்பட்டமை போற்றுதலுக்குரிய விடயமாகும் .

இவ்வாறு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத்தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் றமீஸ் அப்துல்லா குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மூலம் வெளியிடப்பட்ட கிழக்கின் நூறு சிறுகதைகள் தொகுப்பு நூலின் அறிமுக விழா கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது கிழக்கு மாகாண பண்பாட்டருவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தென்கிழக்கு பல்கரைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபுபக்கர் பிரதம அதிதியாகவும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா அங்கு மேலும் பேசுகையில்...

புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை தமிழ் முஸ்லிம் உறவை வளர்க்கின்ற பாலமாக நாவல் சிறுகதை விமர்சனம் கவிதை போன்ற இலக்கிய வடிவங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஈழத்தின் இலக்கிய உற்பத்தி மையமாக வடமாகாணம் உள்ளதென்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னைப்பொறுத்தவரையில் ஈழத்து இலக்கியத்தை பொதுவுடமையாகவே கருதுகின்றேன். அநுராதபுரம், குருநாகல் போன்ற இடங்களில் உள்ள கல்வெட்டுக்கள் பொதுவுடமை உள்ளதென்பதை குறிப்பிட்டு நிற்கின்றது.

நான் 1990 களில் பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்தில் இந்து கலாசார திணைக்களம் நடாத்திய சர்வதேச நாட்டாரியல் கருத்தரங்கில் கலந்துகொண்டேன். இதுவே எனது அறிவுலகத்தை விரிவாக்கம் செய்தது. இந்து காலாசார திணைக்களம் பண்பாடு என்கின்ற சஞ்சிகையினை தரம் குறையாது சிறப்பாக வெளியீடு செய்து வருகின்றது. இதே போன்று ஜாமியா நளிமியா இஸ்லாமிய சிந்தனை என்ற சஞ்சிகையை வெளியிடுகின்றது. இதே போன்று பொருளியில் சஞ்சிகை வெளிவருகின்றது. இந்த வகையில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தற்போதைய மாகாணப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் கிழக்கில் பல விடயங்களை கிளறிக்கிளறி தனது அளுமையை வெளிப்படுத்தி வருகின்றார். இவர் இதற்கு முன்னர் இருந்த மாகாணப் பணிப்பாளர்கள் கண்டுகொள்ளாத அல்லது தொட்டுவிடாத பல விடயங்களை எமக்கு தந்துகொண்டிருக்கின்றார். இதில் இரு அம்சமாகவே இத்திணைக்களத்தின் மூலம் தரம்வாய்ந்த சஞ்சிகையாக யுத்தி சஞ்சிகையின் இரண்டு வெளியீடுகளை மேற்கொண்டுள்ளார். இந்த வகையில் இவரின் செயற்பாடுகளை பாராட்டாமல் இருக்க முடியாது

இன்று எம் மத்தியில் இருந்து அருகி வரும் கலைகளில் ஒன்றான சிலம்பக் கலையை வாய்மொழி சான்றாக மட்டும் வைத்துக்கொள்ளாமல் அதனை அமரசிங்கம் புவனன் என்பவர் மூலமாக நூலாக்கம் செய்து வெளயிட்டுள்ளார். இந்த சிலம்பக் கலையானது கிழக்காசியாவுக்கே சொந்தமானது. இலங்கையில் தமிழர்கள் மட்டுமின்றி கிண்ணியா போன்ற இடங்களில் வாழும் முஸ்லிம்களும் சீனடி சிலம்படியில் ஈடுபட்டு வருவதை காணமுடிகின்றது.

மாகாணப்பணிப்பாளர் நவநீதன் எம்மத்தியல் வாழ்ந்து மறைந்த மாபெரும் இலக்கிய ஆளுமைகளில் ஒருவராகிய பாண்டியூரானின் கவிதைகளை தொகுத்து அதனை பாண்டியூரன் கவிதைகள் என்று நூலுருவாக்கம் செய்து அண்மையில் வெளியீடு செய்திருந்தார். இது எமது இளம் சந்ததிக்கு மட்டுமின்றி பாண்டியூரனின் குடும்பத்துக்கும் இவர் செய்த மற்றுமொரு கைங்கரியமாகும்.

ஒரு அரச நிருவாகி இனம், மதம் என்பவற்றை கடந்து செயற்பட வேண்டும் என்பதற்கு மாகாண பணிப்பாளர் முன்னுதாரணமாக திகழ்கின்றார்.

ஈழத்து நாவல் வரலாற்றில் முக்கியமான இடத்தை பிடித்துள்ள யுனைதா சரீப்பின் புரியாத இரவு என்ற நாவலை வெளியீடு செய்து யுனைதா சரீப்புக்கு ஆத்மார்த்த அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

இதன் அடுத்த ஒரு பாச்சலாக எம் மத்தியில் வாழும் சிறந்த எழுத்தாளராகிய உமா வரதராஜனை அணுகி அவரை தொகுப்பாரியராக்க கொண்டு கிழக்கின் நூறு சிறுகதைகளை வெளியீடு செய்துள்ளமை என்பது பணிப்பாளர் நவநீதனின் இமாலய சாதனைகளில் ஒன்றாகும்.

1950 தொடக்கம் 2020 வரையுமான காலப்பகுதிக்குள் சிறுகதை எழுதியவர்களை கண்ணியப்படுத்தும் வகையில் கிழக்கின் நூறு சிறுகதைகள் வெளிவந்துள்ளது. புதுமைப்பித்தன் மணிக்கொடி தொடங்கி 1970 இல் ரஞ்சிதகுமார் உமா வரதராஜன் என்றாகி பின்னர் அம்ரிதா ஏ.ம். தொடக்கம் நௌஷாட் வரை பல படைப்பாளிகள் இத்தொகுப்புக்குள் கண் சிமிட்டுகின்றனர். இந்த வகையில் இது ஒரு சமூகவியல் ஆவணமாகும்

மேலும் 50 களில் ஏற்பட்ட பெருவெள்ளம் 78 இல் ஏற்பட்ட சூறாவளி இந்திய இராணுவத்தின் வருகை போர்க்கால சூழல் சுனாமி போன்ற பல விடயதானங்கள் இக்கதைகளுக்குள் அடங்கி கிடக்கின்றன.

ஈழத்தில் பல காத்திரமான கவிஞர்கள் எழுத்தாளர்கள் உருவாக வேண்டும் என்பதற்காக தனது ஊடகத்துறை மூலம் வழி சமைத்துக்கொடுத்த பத்திரிகைத்துறை ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகத்தின் சோமாவதி என்ற கதை இத் தொகுப்பில் முதலாவதாக இடம்பிடித்துள்ளது. அரசியல் சமூகப்பிரச்சனைகள் என பல விடயங்களை தொட்ட பித்தன் ஷா தொடக்கம் பலரது கதைகள் இத்தொகுப்பில் பளிச்சிடுகின்றமை போற்றுதலுக்குரிய விடயமாகும் என்றார்.

பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ்வின் உரை

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House