
posted 11th December 2021
தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றி பேசும் தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், களவெடுக்கப்பட்ட கோரளைப்பற்று மத்தி பிரதேச சபையின் 240 சதுர மைல் காணியையும் கோரளை மேற்கு, ஏறாவூர் போன்றவற்றின் காணிகளையும் விடுவிக்க எந்தவொரு முயற்சியும் எடுத்துள்ளாரா என கேட்கின்றோம் என ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது,
அண்மைய பட்ஜட் விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமத் பிள்ளையானுடன் இணைந்து தமிழ், முஸ்லிம் உறவை பிரிப்பதாக சாணக்கியன் குற்றம் சாட்டினார். இந்தக்குற்றச்சாட்டை முன் வைக்கும் சாணக்கியன் தமிழ் முஸ்லிம் உறவுக்கு தடையாக உள்ள காணிப்பிரச்சினையை தீர்த்து வைக்க ஒரு போதும் முயற்சி எடுக்கவில்லை.
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் வாழும் பல பிரதேச சபைகளின் காணிகள், தமிழ் இனவாத அதிகாரிகளால் கள்ளத்தனமாக வேறு பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்ற உண்மையையாவது சாணக்கியன் ஏற்றுக்கொள்வாரா?
அவ்வாறு ஏற்று பாதிக்கப்பட்ட முஸ்லிம்களிடம் சென்று அது பற்றி விசாரித்துள்ளாரா?
தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் அவர்கள் இது பற்றிய முழு விபரங்களையும் பாராளுமன்றத்தில் மிகத்தெளிவாக முன் வைத்துள்ளார். அதனை ஏற்று கோறளை பற்று மத்தி போன்றவற்றின் காணிகளை விடுவித்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை காக்க ஏன் சாணக்கியனால் முடியவில்லை. மட்டக்களப்பு முஸ்லிம்களின் வரலாற்றில் ஹாபிஸ் நசீர் போன்று முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையை இந்தளவு யாரும் பாராளுமன்றத்தில் தெளிவு படுத்தியதில்லை. அத்தகைய ஒருவர் தனது சமூகத்தின் நன்மை கருதி பட்ஜட்டுக்கு ஆதரவளித்தமை பாராட்டுக்குரியதாகும்.
தமிழ் முஸ்லிம் ஒற்றுமை தேவை என வெறுமனே வாயால் சொல்லிக்கொண்டு, செயலால் தமிழ், முஸ்லிம் பகையை ஏற்படுத்தும் முயற்சியிலேயே தமிழ் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் செயற்படுகின்றனர்.
பிள்ளையான் முதலமைச்சராக இருந்த போதும் ஏறாவூர் முஸ்லிம்களின் 500 ஏக்கர் காணிகளை களவெடுத்து அவரும் தமிழ், முஸ்லிம் பகையை ஏற்படுத்தினார். அந்தக்காணிகளை விடுவிக்க எப்போதாவது சாணக்கியன் பேசியுள்ளாரா?
முஸ்லிம்களுக்கெதிரான அனைத்து செயற்பாட்டுக்கும் துணை நின்று கொண்டு வெறுமனே முஸ்லிம் தமிழ் ஒற்றுமை வேண்டும் என சாணக்கியன் சொல்வது தலையை தடவி கண்ணை பிடுங்கும் செயலாகும்.
வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் சிங்கள பேரினவாதத்தை விட தமிழ் பேரினவாதத்தின் கொடுமைகளையே இன்னமும் அனுபவிக்கின்றனர். இவை நீங்காத வரை வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் சிங்கள அரசுடன் இணைந்து செல்வதே சரியான அரசியலாகும் என்பதே ஐக்கிய காங்கிரசின் கொள்கையாகும்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House