
posted 30th December 2021

பிரதி பொலிஸ் மா அதிபராக திகழ்ந்த கே. அரசரட்ணம்
இறைவா நிலையற்ற இம் மண்ணின் வாழ்விலிருந்து நிலையான வாழ்வுக்காக விண்ணக்த்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட எனது உற்ற நண்பனும், என் உயிர்காத்த காவலனும், எனக்கு வழிகாட்டியாகவும், எங்கள் குடுப்பங்களில் ஒரு சகோதரனாகவும் விளங்கிய இலங்கையின் ஓய்வுநிலை பிரதி மா பொலிஸ் அதிகாரியாகவும் சிரிப்பொலி மன்றத்தின் தலைவராகவும் திகழ்ந்த அமரர் கே அரசரட்ணத்தின் ஆன்மாவுக்கு நித்திய இளைப்பாற்றியைக் கொடுத்தருளும் ஆண்டவரே! முடிவுல்லாத ஒளி இவரின் ஆன்மாவுக்கு நித்திய இளைப்பாற்றியைக் கொடுத்தருளும். இறைவா.
இலங்கையின் ஓய்வுநிலை பிரதி பொலிஸ் மா அதிபராக திகழ்ந்த கே. அரசரட்ணம் புதன்கிழமை (29.12.2021) இம் மண்ணின் வாழ்விலிருந்து விடைபெற்றுள்ளார்.
யுத்த சூழ்நிலையில் மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார், மன்னார் மற்றும் முருங்கன் பகுதிகளில் பொலிஸ் நிலையங்களின் அதிகாரியாக திகழ்ந்தவர்.
அன்றைய காலக்கட்டத்திலும் ஏனைய காலங்களிலும் தனது கடமைகளை மிகவும் பொறுப்புடன் செயல்படுத்தியது மட்டுமல்ல எந்த இன மக்கள் மத்தியிலும் இனம் மதம் மொழி என வேறுபாடின்றி மக்கள் மனதை கவர்ந்த ஓர் உள்ளம் கே. அரசரட்ணம்.
யுத்தக்காலத்தில் ஊடகவியலாளரான எனது பேனா நடுநிலையில் குறிப்பாக மக்கள் நலன்நோக்கி செயல்பட்ட போது எனக்கு இருந்துவந்த அச்சுறுத்தல், கைது இவைகளுக்கெல்லாம் முற்றுபுள்ளியிட்டவர்கள் மூவர்.
எனது மதிப்புக்குரிய அரச அதிபர் கே.கணேஷ், சட்டத்தரனியும் வீரகேசரி செய்தி ஆசிரியரும் உயர் ஸ்தானிகர் ஆலோசகராகவும் திகழ்ந்த N. சுபாஸ் சந்திரபோஸ் மற்றையது கே. அரசரட்ணம். இம் மூவரும் எனது உயிருக்கும், வாழ்வுக்கும் தங்களை அர்ப்பணித்து இருந்தவர்கள்.
ஏற்கனவே இருவர் இம் மண்ணிலிருந்து பிரிந்துள்ள நிலையில் தற்பொழுது மூன்றாவது அன்புக்குரியவரும் விடைபெற்று விட்டார்.
இவர்கள் உடலால் எம்மைவிட்டு பிரிந்து சென்றாலும் உள்ளத்தால் என்றும் நிலை கொண்டவர்கள்.
அமரர் கே. அரசரட்ணம் அவர்களை மன்னார் மாவட்டத்தில் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டர்கள். அவ்வளவு தூரம் மக்களை கவர்ந்த மனிதர். மனித கொல்லியாக திகழ்ந்த வடிசாராயம் கடத்தல் இவைகளுக்கு அந்நேரம் முற்றுபுள்ளி வைத்தவர்.
இவரின் சேவையை உணர்ந்த பொலிஸ் திணைக்களம், மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு கீழ் இருந்த பேசாலை பகுதியை இவரின் தலைமைத்துவத்தில் இருந்த தலைமன்னார் பொலிஸ் நிலையத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தது. ஒரு சான்று
குற்றங்கள் தொடர்பாக இவரின் முன் யாரும் வந்துவிட்டாலும் முதலில் சிங்கக் குரல், பின் பணிவான பேச்சு இதைத் தொடர்ந்து அவர்களின் குடும்ப நிலையை உணர்ந்து கொடை வள்ளலாக மாறிவிடுவார்.
இவ்வாறான ஒருவரின் உடல் மண்ணைவிட்டு மறைந்தாலும் உள்ளம் அவரின் புகழ் என்றும் மறையாது என்பது திண்ணம். காரணம் இவரின் நல் செயல்பாடு பற் பல.
குறைந்தது மாதம் இருமுறை நாங்கள் இருவரும் பழைமையை மீட்டு உரையாடினாலும், இவர் சுகவீனம் அடையும் ஒரு மாதத்துக்கு முன் என்னை கட்டாயம் வரும்படி அழைப்பு விடுத்தபோதும் கொவிட் ஒரு தடையாக இருந்தமையால் நான் அவரின் குரலுக்கு செவிசாய்க்காமல் விட்டதை உணர்ந்து கவலை அடைகின்றேன்.
இறைவா இவர் இம் மண்ணில் மனித நேயத்துக்காக விதைத்த அனைத்து நல் செயல்பாடுகளையும் உம்முன் நிலைநிறுத்தி இவரின் ஆன்மாவுக்கு நித்திய இளைப்பாற்றியைக் கொடுத்தருளும் ஆமென். ஓம் சாந்தி!

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House