பல்வகைச் செய்தித்துணுக்குகள்

நீதிபதிகளுக்கு 2022 ஜனவரி 5ஆம் திகதி இடமாற்றம்

வடக்கு - கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு 2022 ஜனவரி 5ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான வழமையான இடமாற்ற நடைமுறையின் கீழ் இந்த இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாகவும், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்

மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி விநாயகமூர்த்தி இராமக்கமலன், மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

முதுபெரும் பத்திரிகையாளரான ம. வ. கானமயில்நாதனுக்கு அஞ்சலி நிகழ்வு

அண்மையில் காலமான யாழ்ப்பாணத்தின் முதுபெரும் பத்திரிகையாளரான ம. வ. கானமயில்நாதனுக்கு அஞ்சலி நிகழ்வு ஒன்று இன்று இடம்பெற்றது.

வட்டுக்கோட்டை வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இதன்போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பத்திரிகையாளர் பண்டிதர் ந. கடம்பேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன், பத்திரிகையாளர்கள், மதருகுமார் அன்னாரின் உறவினர்கள், ஊடகக்கற்கை ஆசிரியர்கள், ஊடகத்துறை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

பல்வகைச் செய்தித்துணுக்குகள்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House