பரபரப்பும், பஜட்டும்

கிழக்கு மாகாணத்தின் முகவெற்றிலை என வர்ணிக்கப்படும் கல்முனை மாநகரத்திற்கான, மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் நாளை 8 ஆம் திகதி புதன் கிழமை சமர்ப்பிக்கப்பட விருக்கின்றது.

பரபரப்பான சூழ்நிலையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சி அதிகாரத்திலிருக்கும் இந்த மாநகர சபையின் மாதாந்த அமர்வில் குறித்த வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்படுவதற்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாளை பதன் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாக விருக்கும் மாநகர சபையின் மாதாந்த அமர்வில் மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் குறித்த 2022 ஆம் ஆண்டுக்கான சபையின் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார்.

நிரப்பப்படாத இரு உறுப்பினர் வெற்றிடங்களை உட்படுத்திய 41 உறுப்பிகர்களில் 39 உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்து கொள்வரென எதிர்பார்க்கப்படுவதுடன்,

பலகட்சிகளையும் சார்ந்த இவர்கள் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொள்வதுடன், வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பிலும் கலந்து கொள்வரெனவும் தெரியவருகின்றது.

குறித்த வரவு செலவுத்திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பரபரப்புக்கு மத்தியில் வரவு செலவுத்திட்டம் அதிகப்படிவாக்குகளால் நிறைவேற்றப்படுமா, அல்லது தோற்கடிக்கப்படுமா என்ற கேள்விகளும் கல்முனை மாநகரம் வாழ் தமிழ், முஸ்லிம் மக்களிடையே எழுப்பப்பட்டு வருகின்றது.

தற்சமயம் உள்ள நிலவரங்களின்படி முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினரால் சமர்ப்பிக்கப்படும் இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு தமிழரசுக்கட்சி சார்ந்த 4 உறுப்பினர்கள் திடமாக ஆதரித்து வாக்களிப்பதுடன், அக்கட்சியின் இரு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்கலாமெனவும்,

தமிழர் விடுதலைக் கூட்டணிசார்பிலான 3 உறுப்பினர்களும் எதிர்த்தே வாக்களிக்கலாமெனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை சாய்ந்தமருதுக்கு தனி உள்ளுராட்சி சபை வேண்டுமென்ற கோஷத்துடன், மாநகர சபைத் தேர்தலில் தோடம்பழச்சின்னத்தில் போட்டியிட்டு தெரிவான சுயேச்சைக் குழு உறுப்பினர்கள் ஒன்பது பேரும், இந்த வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கலாம் அல்லது குறித்த 9 உறுப்பினர்களும் சபை அமர்வில் கலந்து கொள்ளாதுவிடலாமெனவும் தகவல்கள் மூலம் அறியவருகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களினதும் நிலைப்பாடு இது விடயத்தில் எவ்வாறு அமையுமென்ற ஊகங்களும் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த வரவு செலவுத்திட்டத்தை தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் ஆதரிக்கக் கூடாது என்ற குரல்களும் கல்முனை மாநகரம் வாழ் தமிழ் மக்களிடையேயிருந்து கிளம்பியுள்ளன.

இத்தகைய பரபரப்புகளுக்கும், நெருக்கடிகளுக்கும் மத்தியில் நாளை சமர்ப்பிக்கப்படவிருக்கும் கல்முனை மாநகர சபையின் 2022 வரவு செலவுத்திட்டம் தப்பிப்பிழைத்து நிறைவேறுமா! அல்லது தோற்கடிக்கப்படுமா? என்ற கேள்விகள் மேலோங்கி நிற்கின்றன.

பரபரப்பும், பஜட்டும்

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House