posted 15th December 2021
இலங்கையின் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசா தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வடக்கு மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆங்கிலம், சிங்களத்தில் மட்டுமே இடம்பெற்றது. தமிழ் மொழி பெயர்ப்பு செய்யாதமையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறினார்.
“நூற்றுக்கு நூறு வீதம் தமிழர்கள் வாழும் இந்த வட மாகாணம் சார்ந்த கூட்டத்திலே நீங்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் பேசுவதால் எங்களால் கிரகித்து பதில் வார்த்தைகளைச் சொல்ல முடியவில்லை. ஆகவே, நான் இந்த கூட்டத்தில் இருந்து வெளியேறுகிறேன்” - என்று கூட்டத்திலிருந்து வெளியேறிய பின்னர் பத்திரிகையாளர்களிடம் சிறீதரன் கூறினார்.
மேலும், “வடக்கு மாகாண சபையின் கூட்டம் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு சென்றிருந்தபோது பாராளுமன்ற உறுப்பினர்கள் செயலாளர்கள், அரச அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்திற்கு நான் போயிருந்த போதும் ஆங்கில மொழியிலும் சிங்கள மொழியிலுமே கூட்டத்திற்கான பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
“எனக்கு ஆங்கிலம் தெரியாது. தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்வதற்கான ஏற்பாடு செய்து தரவேண்டும் - என்று நான் கேட்டபோது, செய்கின்றோம் - பார்ப்போம் என்று சொன்னார்கள். ஆனால், அதன் பின்னர் ஒரு மணி நேரம் அங்கே இருந்த போதும் எந்த விதமான மொழி மாற்றத்திற்கான ஆயத்தங்களும் நடைபெறவில்லை.
இதனால் இந்த விடயங்களை என்னால் கிரகித்து பதில் சொல்ல முடியாது என்று சொன்னேன். எத்தனையோ ஆயிரம் பேர் இந்த மண்ணில் இறந்ததற்கு அடிப்படை மொழி ரீதியான பிரச்னையே ஆகும். இதனாலேயே மாகாண சபை முறைமை தோன்றியது. நூற்றுக்கு நூறு வீதம் தமிழர்கள் வாழும் இந்த வட மாகாணத்திலே நீங்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் பேசுவதால் எங்களால் கிரகித்து பதில் வார்த்தைகளைச் சொல்ல முடியவில்லை. ஆகவே, நான் இந்த கூட்டத்தில் இருப்பதில் பிரயோசனமில்லை என்று கருதுகிறேன் எனக் கூறிவிட்டு கூட்டத்தில் இருந்து வெளியேறுகிறேன்", என்றார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House