நுவரெலியா பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற 217ஆவது 'அமாதம் சிசிலச' நிகழ்வில் கௌரவ பிரதமர் பங்கேற்பு

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கு அமைய அனைத்து பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் 'அமாதம் சிசிலச' தர்ம உபதேசத் தொடரின் 217ஆவது தர்ம உபதேசம் இன்று (18) நுவரெலியாவிலுள்ள பிரதமர் இல்லத்தில் நடைபெற்றது.

பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள் புத்தபெருமானுக்கு மலர் பூஜை நிகழ்த்தியதை தொடர்ந்து, தர்ம உபதேசம் நிகழ்த்துவதற்காக வருகைத்தந்த வரலாற்று சிறப்புமிக்க வாரியபொல, கொலம்பகம ஸ்ரீ மியுகுணாராம ரஜமஹா விகாராதிகாரி வணக்கத்திற்குரிய கலாநிதி வாரியபொல, கொலம்பகம ஸ்ரீ மியுகுணாராம ரஜமஹா விகாராதிகாரி வணக்கத்திற்குரிய கலாநிதி கல்லேஹெபிடியே பேமரதன தேரரை வரவேற்றார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களே நீங்கள் முன்மாதிரியான அரச தலைவராக 217வது தடவையாகவும் பல்வேறு கடமைகளை கைவிட்டு பௌர்ணமி விடுமுறையை ஆன்மீக நாளாக மாற்றி தர்மத்தின் பாதையை வளர்ச்சியடைய செய்வதாக வணக்கத்திற்குரிய தேரர் சுட்டிக்காட்டினார்.

அதனை தொடர்ந்து நம்பிக்கை, நாணம், பயம், சிரத்தை, தியாகம், ஞானம் போன்ற கருப்பொருட்களுடன் தமது வாழ்க்கையை எவ்வாறு வடிவமைத்துக் கொள்வது என்பதை கலாநிதி கல்லேஹெபிடியே பேமரதன தேரர் விளக்கமளித்து உபதேசம் நிகழ்த்தினார்.

'இந்த நாட்டில் ராஜபக்ஷர்கள் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் செய்ய வேண்டியது மக்களை வாழ வைப்பதும் மக்களுக்கு வாழ்வளிப்பதும் தான். முப்பது வருட யுத்தம் முடிவடைந்த பின்னர், தேசத்திற்கு அடைக்கலம் கொடுத்தீர்கள். இரண்டாவது ஆபத்து இரண்டு வருடங்களாக நீடிக்கும் பயங்கரமான கொரோனா. கண்ணுக்கு தெரியாத எதிரி. அந்த பேரழிவை வெற்றிகரமாக சமாளித்து, அதனை சரியாக நிர்வகித்து, அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அளப்பரிய பலத்தை கொடுத்து, உங்கள் கண்ணுக்கு தெரியாத எதிரியை திட்டமிட்டு தோற்கடித்து, இந்த தேசத்திற்கு இரண்டாவது முறையாக புகலிடத்தை தந்தார்.

இந்நாட்டு மக்கள் இந்த மண்ணை உங்களிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த அன்பான நம்பிக்கை இன்றும் மதகுருமார்கள் மற்றும் தேசத்தின் இதயங்களில் உள்ளது. ஜனாதிபதியும், பிரதமரும் பலமான முறையில் ஒன்றிணைந்து மீண்டும் ஒருமுறை இந்த தேசத்தின் நம்பிக்கையை யதார்த்தமாக்கி எதிர்வரும் காலங்களில் இப்பூமியை குணப்படுத்தும் பாரிய செயற்பாட்டில் இறங்கட்டும்' என வணக்கத்துக்குரிய கலாநிதி கல்லேஹெபிடியே பேமரதன தேரர் தனது உபதேசத்தின் நிறைவில் தெரிவித்தார்.

துறவரத்தில் ஈடுபட்டுள்ள மாதர்களை ஒன்றிணைத்து நாங்கள் இந்த சங்கமித்தா தினத்தை இனிவரும் காலங்களில் ஒரு தேசிய தினமாக ஏற்பாடு செய்வோம். இந்த நாள்தான் நம் நாட்டில் உண்மையான மகளிர் தினமாக இருக்க வேண்டும். அடுத்த ஆண்டு தேசிய சங்கமித்தா தினத்தை நினைவுகூர்ந்து, துறவரத்தில் ஈடுபட்டுள்ள அப்பாவி மாதர்களை பாதுகாத்து, பயிற்சியளித்து, ஒரு தேசிய வேலைத்திட்டத்திற்கு இந்நாட்டை நெறிப்படுத்துவோம் என கலாநிதி கல்லேஹெபிடியே பேமரதன தேரர் கோரிக்கை விடுத்தார்.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நடைபெற்ற 'அமாதம் சிசிலச' தர்ம உபதேச நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ, கௌரவ அமைச்சர் சி.பீ.ரத்நாயக்க உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்.

நுவரெலியா பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற 217ஆவது 'அமாதம் சிசிலச' நிகழ்வில் கௌரவ பிரதமர் பங்கேற்பு

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House