
posted 3rd December 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகளில் தற்காலிகமாக கடமையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், பத்மநாபா மன்றம் ஈ.பி.ஆர்.எல்.எப். இரா.துரைரெத்தினம் இக்கோரிக்கையினை அரசுக்கு விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இதுதொடர்பான அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு மாநகரசபை, காத்தான்குடி (நகரசபை), ஏறாவூர்பற்று (நகரசபை), ஏறாவூர்பற்று (செங்கலடி), கோறளைப்பற்று வடக்கு (வாகரை). கோறளைப் பற்று (வாழைச்சேனை). கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, மண்முனைப்பற்று (ஆரையம்பதி), மன்முனைதென்எருவில்பற்று (களுதாவளை),போரதீவுப்பற்று(வெல்லாவெளி), மண்முனை தென் மேற்கு (கொக்கட்டிச்சோலை), மண்முனை மேற்கு (வவுணதீவு) ஆகிய உள்ளூராட்சி சபைகளில் தற்காலிகம், ஓப்பந்தம், பதீலிடு, தினக்கூலி அடிப்படையில் வேலை செய்கின்ற அண்ணளவாக 650ற்கு மேற்பட்ட அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்குமாறு 01.12.2021 அன்று மாவட்டத்திலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் அரசின் கவனத்தை ஈர்க்குமுகமாக தொழிற்சங்கங்கள் வெகுஜன ரீதியான போராட்டங்களை நடாத்தி மகஜர்களை கையளித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்படி சபைகளில் கடமையாற்றும் ஊழியர்கள் டெங்கு வேலைத்திட்டம், வடிகான் தும்பரவு செய்தல், குப்பை குழங்களை, கழிவுப்பொருட்களை துப்பரவு செய்தல்.கொரோனா-19 போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருபவர்கள் தங்களுக்கு கிருமித் தொற்று, உயிர் ஆபத்து என்று தெரிந்திருந்தும் தங்களது உயிர்களை துச்சமாக நினைத்து கடமையாற்றி வருவதோடு மட்டுமல்லாமல் பிரதேச சபைகளில் ஏற்படும் நன்மை தீமைகளில் பங்களிப்பு செய்து வருகின்றனர். இவர்களது கோரிக்கை நியாயமானது. – எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House