நிதி உதவியின்றித் தவிக்கும் சதுக்கம்

உடுத்துறை ஆழிப்பேரலை பொது நினைவுச்சதுக்கத்திற்கு காணி உரிமம் வழங்கப்பட்டுள்ளதால் சதுக்கக்காணியை சுற்றுமதில் அமைத்து எல்லைப்படுத்த வேண்டிய நிதிஉதவிகளைப் பெற்று வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மருதங்கேணி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கே. பிரபாகர மூர்த்தி கோரிக்கை எடுத்துள்ளார்.

வடமராட்சி கிழக்கில் ஆழிப்பேரலையில் பலியான 1080 பேரில் 720 பேரின் உடல்கள் இச்சதுக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இச்சதுக்கக் காணியின் உரிமையாளர் ஒய்வு நிலை உதவி அரசாங்க அதிபர் எஸ் . புத்திசிகாமணி 40 பரப்பு காணியின் உரிமத்தை இச்சதுக்கத்தை பராமரித்து பேணி வரும் உடுத்துறை கடற்றொலிலாளர் கூட்டுறவுச்சங்கத்திற்கு வழங்கியுள்ளார். ஆதலால் இச்சதுக்கத்தை அபிவிருத்தி செய்ய எந்தத் தடையும் இருக்காது. ஆதலால் இக்காணியை எல்லைப்படுத்த வேண்டும் அதற்கான நிதியை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கித்தர வேண்டும் என அவர் தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளார். இப் பொது நினைவுச்சதுக்கத்தின் அபிவிருத்திக்கு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் ஏற்கனவே நிதி ஒதுக்கீடுகளைச் செய்திருந்தார். இங்கு மலசலகூடம் ஒன்றை அமைக்க யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் 3 இலட்சம் ரூபா நிதியை பன்முறைப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்திருந்த போதிலும் சில நிர்வாகச் சிக்கலினால் அந்நிதி இன்னமும் கிடைக்கவில்லை.

நிதி உதவியின்றித் தவிக்கும் சதுக்கம்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House