தொடரும் மின்வெட்டு

இலங்கையில் புத்தளம் நுரைச்சோலை அனல் மின் நிலையம் முழுவதுமாக செயற்பாட்டுக்கு வரும் வரை நாட்டின் சில பகுதிகளில் ஒரு மணித்தியால மின்வெட்டு ஏற்படலாம் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டு ஏற்படக்கூடும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, தடைப்பட்டிருந்த மின்சாரம் மற்றும் குடிதண்ணீர் விநியோகம் முழுவதுமாக வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

நேற்று முற்பகல் 11.30 மணியளவில் பிரதான மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டது.
எவ்வாறாயினும், சுமார் 6 மணித்தியாலங்களுக்குப் பின்னர் மின் விநியோகம் வழமைக்குக் கொண்டுவரப்பட்டபோதிலும், அமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக நேற்று இரவு வரை நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை.

எவ்வாறாயினும், நேற்று நள்ளிரவுக்குள் மின்சார விநியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்பியதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
அனைத்து துணை மின்நிலையங்களும் தற்போது மின் விநியோகத்தில் இருந்தாலும், நுரைச்சோலை அனல் மின் நிலையம் இன்னும் செயல்படாமல் உள்ளது.

தொடரும் மின்வெட்டு

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House