
posted 18th December 2021
கிழக்கிலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் கடந்த ஒரு வராகாலமாகப் பெய்துவரும் பெருமழையால் பொது மக்கள் பெரும் அவலங்களைச் சந்தித்து வருவதுடன், எகிறிவரும் விலைவாசி உயர்வால் பெரும் துயருக்குள்ளாகியும் வருகின்றனர்.
தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, அன்றாடம் வருமானம் பெறும் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் பலரும் பொருளாதாரக் கஷ்ட நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அதேவேளை, அத்தியாவசியப் பொருட்களுட்பட, உணவுப் பொருட்களின் விலைகளும் எதிர்பாராத அளவு எகிறிய வண்ணமுள்ளன.
இதனால் வாழ்க்கைச் செலவையும், விலைவாசி உயர்வையும் தாங்க முடியாது பல குடும்பங்கள் திண்டாடும் துயர நிலமையும் ஏற்பட்டுள்ளது.
வழக்கமான உணவுப் பொருட்களான மரக்கறி வகைகளின் விலைகள் பெருமளவில் உயர்ந்துள்ள நிலையில் அரிசி, கோழி இறைச்சி என்பவற்றின் விலைகளும் திடீர் உயர்ச்சி அடைந்துள்ளன.
முன்னர் 550 ரூபா வரை விற்பனையான ஒரு கிலோ கோழி இறைச்சி தற்சமயம் 780 ரூபா முதல் 820 ரூபா வரை விற்பனையாவதுடன், மாட்டிறைச்சி ஒரு கிலோ 1000 ரூபா வரை விலை உயர்த்துள்ளது.
மேலும், அத்தியாவசியமான பல்வேறு தேவைகளின் கட்டணங்கள், உதாரணமாக, சிகை அலங்கார (சலூன்) நிலையங்களின் கட்டணங்கள், உயர்த்தப்பட்டுவதற்குத் தள்ளப்பட்டதனால், ஏற்கனவே மக்களின் மேலுள்ள பழு மேலும் மேலும் அதிகமாகி அவர்களைத் தாங்கொணாத்துயருக்குத் தள்ளியுள்ளது.
எனவே, மக்களின் இவ் அவநிலைக்கு அரசத் திணைக்களங்களோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களோ கை கொடுக்குமா? உதவிக்கரம் கொடுத்து நமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துமா?

எ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House