
posted 20th December 2021

இந்தியமீனவர்களின் இழுவைப்படகுகள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதன் காரணமாக பருத்தித்துறை, முனைப் பகுதிதியைச் சேர்ந்த செல்வரத்தினம் மோகன்ராஜ் என்ற மீனவரது படகுக்கு இந்திய மீனவர்கள் கற்காளால் எறிந்து தாக்குதல் நடாத்தியதால் அவரின் படகு சேதமடைந்துள்ளது.
திங்கட்கிழமை (20) அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரோலர்களின் அத்துமீறலால் மூன்று மீனவர்களது வலைகள் அறுத்து அழிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய சிதைவடைந்த வலைகளை மீட்டுக் கொண்டு மீனவர்கள் கரையை வந்தடைந்துள்ளனர்.
பருத்தித்துறை முனை கடற்கரையில் இருந்து சுமார் 6 கடல் மைல் தூரத்தில் இத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமது வலைகள் படுக்கவிட்டிருந்த பகுதியால் நூற்றுக் கணக்கான இந்திய இழுவைப் படகுகள் இழுவைமடியை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர்.
எமது வலைகள், வலைகள் என கத்திய போது இந்திய மீனவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியும், கற்களைக் கொண்டு தாக்குதலும் நடாத்தினர் என முனை பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை இந்திய தூதுவருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம் அதாவது நீங்கள் எங்களுடன் வாருங்கள் உங்களது மீனவர்கள் எவ்வளவு கடல் மைல் தூரத்தில் வந்து நிற்கிறார்கள் என்பதை காட்டுகிறோம்.
நாம் தமிழ்நாடு கோடியாக்கரையில் வந்து வலை படுக்கவிடவில்லை. எமது ஊர்கடற்பரப்பிலேயே மீன்பிடித் தொழிலைச் செய்கிறோம்.
எங்களுடன் வாருங்கள் கூடிச் சென்று காட்டுகிறோம் என மீனவர்கள் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House