தீவகத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்களை

யாழ்ப்பாணத்தின் தீவகத்தில் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்ட சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்களை இந்தியாவுக்கு வழங்கும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

நெடுந்தீவு, அனலைத்தீவு, நயினதீவில் சீனா நிறுவனம் முன்னெடுக்கப்படவிருந்த சூரியசக்தி மின் உற்பத்தி திட்டங்களை கைவிடுவதாக கடந்த 2ஆம் திகதி சீனா அறிவித்திருந்தது.

மூன்றாம் தரப்பிடம் பாதுகாப்பு தொடர்பில் எழுந்த கரிசனையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகவும் சீனா குறிப்பிட்டிருந்தது. இது குறித்து நேற்று அமைச்சரவை இணைபேச்சாளர் ரமேஷ் பத்திரணவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

வடக்கில் மூன்று தீவுகளில் மேற்கொள்ளப்பட்ட மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திடம் அரசாங்கம் வழங்கத் தீர்மானித்துள்ளதா? சேதனை பசளை பிரச்னையால் சீன - இலங்கை உறவில் சிக்கல் எழுந்துள்ளதா என்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,

“இந்த வேலைத்திட்டத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை. உரப் பிரச்னை தொடர்பில் இலங்கையிலுள்ள சீன தூதுவர் தெளிவாக நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். அதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கை மற்றும் தனிப்பட்ட நட்புறவில் எவ்வித விரிசலும் இல்லை- என்றார்.

மேலும், சேதன பசளை விவகாரம் வர்த்தகத்துடன் தொடர்புடைய பிரச்சினையாகும். இது தொடர்பான வழக்கு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன. இது குறித்த இரு தரப்பினருக்கு மாத்திரமானதாகும். இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.

தீவகத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்களை

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House