தரமில்லா எரிவாயு.  குறைபாட்டை ஏற்றுக்கொண்ட  அமைச்சர்

இலங்கையில் எரிவாயு தரம் தொடர்பாக பல குறைபாடுகள் இருந்தன. அது பெரும் பிரச்னையாகும். இதனை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று, பெருந்தோட்ட அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.

கொழும்பு சீனிகம தேவாலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாட்டில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிவாயுவின் தரத்தில் குறைபாடுகள் இருந்ததை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இவ்வாறான குறைபாடுகள் எமது அரசாங்கத்தில் மட்டுமல்ல கடந்த அரசாங்கங்களின் ஆட்சியிலும் இருந்தது. தவறுகள் நடந்திருந்தால் அதனை ஒப்புக்கொள்வது அவசியம்.

எரிவாயு நுகர்வு தொடர்பிலான சட்ட கட்டமைப்பில் குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆனால், தற்போது எரிவாயு நுகர்வோரின் பாதுகாப்பை உறுதிசெயவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அதற்கான சட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. மக்களின் எதிர்கால பாதுகாப்புக்காக சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை கொண்டுவந்து தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தரமில்லா எரிவாயு.  குறைபாட்டை ஏற்றுக்கொண்ட  அமைச்சர்

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House