தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டம்

இந்தியப் பிரதமருக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தில் உள்ளடங்கவேண்டிய விடயங்கள் தொடர்பில் புதிய வரைவு தயாரிப்பது என்ற இணக்கத்துடன் கொழும்பில் நேற்றுக் கூடிப் பேசிய தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டம் நிறைவடைந்தது.

அத்துடன், இந்தப் புதிய வரைவை சரிபார்த்து எதிர்வரும் சனிக்கிழமைக்குள் அந்த ஆவணத்தில் 11 கட்சிகளின் தலைவர்களும் கையொப்பமிடுவது என்றும் இவ்வாறு அனைத்துத் தலைவர்களும் கையொப்பமிட்டதும் திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் மோடிக்கு இந்தியத் தூதரகம் ஊடாக கடித ஆவணத்தை அனுப்பி வைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரெலோ கட்சியின் ஏற்பாட்டில் 13ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதை இந்தியா உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துமாறு இந்தியப் பிரதமரை கோரி தமிழ் பேசும் கட்சிகள் சார்பில் கடிதம் ஒன்றை அனுப்புவதற்கான சந்திப்புக்கள் இடம்பெற்றன. இந்தக் கடிதத்துக்கான வரைவு தயாரிக்கப்பட்ட நிலையில் அதில் திருத்தங்களை ஏற்படுத்தி கையொப்பமிடுவதற்காக நேற்றைய தினம் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கொழும்பு குளோபல் ரவர்ஸ் ஹோட்டலில் ஒன்றுகூடினர்.

காலை, மாலை என இரு அமர்வுகளாக இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி நேற்று முன்தினம் செயல்குழு கூட்டத்தில் முடிவு எடுத்தவாறு தனியான வரைவு ஒன்றுடன் பங்கேற்றது. ஏற்கனவே ரெலோவும் மற்றைய கட்சிகளும் இணைந்து உருவாக்கிய வரைவு 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதையே கோரிக்கையாகக் கொண்டிருந்தது. தமிழ் அரசுக் கட்சியின் வரைவில், கூட்டு உறவு சமஷ்டி கட்டமைப்பை கோரிக்கையாகவும் உச்சபட்ச அதிகாரப் பரவலாக்கத்தையும் கோரும் விதமான வரைவை சமர்ப்பித்தது.

இந்த விடயங்கள் தொடர்பில் தமிழ் பேசும் கட்சிகள் கூடி ஆராய்ந்தன. இதன்போது கடுமையான வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து வரைவில் தமிழ் அரசுக் கட்சியின் விடயங்களை கோரிக்கொண்டு, தற்காலிக ஏற்பாடாக 13ஆவது திருத்தத்தை அப்படியே நடைமுறைப்படுத்தக் கோருவதை அடிப்படையாகக் கொண்டு வரைவில் திருத்தம் ஏற்படுத்த உடன்பாடு எட்டப்பட்டது. மதியம் 1.30 மணியுடன் முதல் அமரவு முடிவடைந்த நிலையில், புதிய வரைவு தயாரித்து முடிக்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து பிற்பகல் 2.45 மணியளவில் இரண்டாவது அமர்வு ஆரம்பமானது. இந்த அமர்வு ஆரம்பமான பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி. வி. விக்னேஸ்வரன் ஆகியோர் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்துமாறும், வரைவை இறுதி செய்து அனுப்பிய பின்னர் அவற்றை படித்து திருத்தங்கள் இருந்தால் கூறுவதாகக் கூறி கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

தொடர்ந்து காரசாரமாக இடம்பெற்ற கூட்டத்தில் இறுதி வரைவில் இடம்பெற வேண்டிய விடயங்கள் குறித்து இறுதியில் சுமூகமாக முடிவு எட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து 5.45 மணியளவில் கூட்டம் நிறைவடைந்தது.

இந்த சந்திப்பில் எட்டப்பட்ட விடயங்கள் அடங்கிய இறுதி வரைவு எட்டப்பட்டதும், அந்த வரைவு அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டு, அவர்கள் படித்து திருத்தங்கள் ஏதும் இருந்தால் அவையும் திருத்தப்பட்டதன் பின்னர் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் அந்தக் கடிதத்தில் கையொப்பமிடுவர். எதிர்வரும் சனிக்கிழமை மாலைக்குள் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கையொப்பமிடுவது என்று முடிவு எட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை இந்திய தூதரகம் ஊடாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதத்தை அனுப்பி வைப்பது என்று முடிவு எட்டப்பட்டது.

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டம்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House