தடுப்பூசிகளை போட தவற வேண்டாம் - எச்சரிக்கிறார் பணிப்பாளர் ரி.வினோதன்
தடுப்பூசிகளை போட தவற வேண்டாம் - எச்சரிக்கிறார் பணிப்பாளர் ரி.வினோதன்

மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr ரி. வினோதன்

மன்னார் மாவட்டத்தில் சிரேஷ்ட பிரஜைகள் கொவிட் தடுப்பூசியில் மேலதிக வலுவூட்டிடல் (பூஸ்டர்) தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும் நேரம் வந்துள்ளமையால் இதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். கொவிட் தொற்று நிலமை தீவிரமடைவதற்கான சூழ்நிலையும் காணப்படுவதாகவும் அதாவது பண்டிகைகாலம், குளிர்கால நிலை போன்றவை கொவிட் தொற்றுவதற்கு ஏதுவாகுமென மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி. வினோதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பணிப்பாளர் ரி.வினோதன் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

மன்னார் மாவட்டத்தில் சிரேஷ்ட பிரஜைகள் 12,206 பேர் முதலாவது கொவிட் தடுப்பூசியை பெற்றுள்ளார்கள். இவர்களில் 11,500 பேர்வரை இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுள்ளனர். இவர்களில் 10,000 பேர்வரை தமது இரண்டாவது தடுப்பூசயைப்பெற்று மூன்று மாதங்கள் கடந்து விட்டன.

இவர்கள் தற்பொழுது தமது மேலதிக வலுவூட்டிடல் (பூஸ்டர்) தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துள்ளது எனவும், இவர்களுக்கான இத் தடுப்பூசியானது தற்பொழுது மன்னாரில் சிரேஷ்ட பிரஜைகளுக்கு போடப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுவரை 1600 பேரே இவ் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி இரண்டு செலுத்தப்பட்டு மூன்று மாதங்கள் கழிந்த பின்னர் அவற்றால் வழங்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடையத் தொடங்கும் என்பதால் சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் நீண்ட கால நோய்களை கொண்டவர்கள் மூன்று மாதத்தின் பின்னர் இவ் பூஸ்டர் தடுப்பூசியை போடுவது இன்றியமையாதது என மேலும் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது கொவிட் தொற்று நிலமை தீவிரமடைவதற்கான சூழ்நிலையும் காணப்படுவதாகவும், குறிப்பாகபண்டிகைகாலம், குளிர்கால நிலை போன்றவை கொவிட் தொற்றுவதற்கு ஏதுவாகும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒமிக்ரோன் என புதிய கொவிட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதால் இத் தடுப்பூசியானது இதற்கு வெற்றியளிக்குமா என்பது தற்பொழுது கேள்விக்குறியாக இருக்கின்றபோதும் இதற்கு எதிரான பாதுகாப்பை இத் தடுப்பூசிகள் வழங்கும் எனவும் தெரிவிக்கப்படுவதாக அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகளை போட தவற வேண்டாம் - எச்சரிக்கிறார் பணிப்பாளர் ரி.வினோதன்

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House