
posted 2nd December 2021
யாழ்ப்பாண மாவட்டத்தில் மழையுடனான காலநிலையின் பின்னர் டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துக் காணப்படுகின்றது. கடந்த வருடத்தைவிட இந்த வருடத்தில் கடந்த வாரம் வரை டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வரை 133 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.
நேற்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், எதிர்வரும் 6ஆம் திகதி தொடக்கம் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் அவர் கூறினார்.
மேலும். டெங்கு நோய் பரவல் அதிகமாக செப்ரெம்பர் ஒக்ரோபர் நவம்பர், டிசெம்பர் மாதங்களில் அதிகரித்து காணப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே சுகாதார விழிப்புணர்வு குழுக் கூட்டத்தில் கொரோனா, டெங்கு தொடர்பில் ஆராய்ந்து இருந்தோம்.
இதற்கிணங்க டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து இருக்கின்றோம். அதன் பிரகாரம் எதிர்வரும் 6ஆம் திகதி தொடக்கம் ஒரு வாரத்தை நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனப்படுத்தி அந்த வாரம் யாழ்ப்பாண குடாநாடு முழுவதும் அனைத்து பங்குதாரர்களுடனும் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம்.
இதனடிப்படையில் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலும் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு செயலணி கூட்டத்தை நடத்தி இதனடிப்படையில் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவு ரீதியாகவும் தங்களுடைய பிரதேசத்தில் டெங்கு கட்டுப்பாட்டை மேற்கொள்ள கூடிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.
ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் உள்ள உள்ளூராட்சி மன்றத்தினர் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையினர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இணைந்து டெங்கு ஒழிப்பு வாரத்தை செயல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது - என்றார்

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House