
posted 9th December 2021
டெங்கு பரவல் மன்னாரில் அதிகரித்துள்ளதால், இவ்வாரம் 08ம் திகதி தொடக்கம் டெங்கு வாரமாக அனஷ்டிக்க இன்று புதன் கிழமை (08) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டீமெல் தலைமையில் நடந்த அவசரக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு அரச அதிபர் தெரிவிக்கையில்;
கொவிட் பரவலுடன், டெங்கு நோயும் பரவுவதால் உயிர் அச்சுறுத்தலுக்குக் காரணிகளாக இருக்கும் இவ்விரு நோய்களிலிருந்து மக்களைக் காப்பாற்ற எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பதற்காக இவ் அவசரக் கூட்டத்தைக் கூட்டினேன்.
இக்கூட்டத்தில், மன்னார் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பனங்கட்டுகொட்டு. எமில்நகர், சின்னக்கடை, பேசாலை 5, 8 ஆம் வட்டாரங்கள், தோட்டவெளி போன்ற இடங்களை உயர் தொற்று இடங்களாக சுகாதார பகுதினர் அடையாளப்படுத்தியுள்ளனர்.
எனவே, மாவட்டத்தின் பிரதேச செயலகங்கள் நகர சபை, பிரதேச சபை பாதுகாப்பு தரப்பினர், பொலிஸ் தரப்பினர் சுகாதார தரப்பினர் மற்றும் சமூக மட்ட அமைப்புக்கள் அனைவரும் இணைந்து சிரமதானங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
அத்துடன், இந்த இடங்களில் வியாழக்கிழமை (9.12.2021) லிருந்து ஒரு வாரத்துக்கான சிரமாதானத்தையும், அதேவேளையில் இவ்விடங்களிலுள்ள சகல வீடுகளிலும் குறித்த குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டு டெங்கு நோயை ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
இதற்கு சகல சமூகமட்ட அமைப்புக்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என இங்கு கோரிக்கைவிட்டு நிற்கின்றோம்.
அத்துடன் சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள தரவின்படி 25 வயது தொடக்கம் 49 வயதுக்கு உட்பட்ட நபர்களே டெங்கு நோய்க்கு அதிகமாக இங்கு உள்ளாகியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தொழிலுக்குச் செல்லும் வயது கொண்டவர்களாக இருப்பதாலும், அதேவேளையில் டெங்கு நோயானது குறைந்த வயதுடையோரையே தாக்கக்கூடிய நோயாக இருப்பதாலும் மக்கள் ஒவ்வொருவரும் விழிப்புடனும் அவதானத்துடனும் செயல்பட வேண்டும்.
சுகாதார தரப்பினர் பிரதேச செயலகங்கள், நகர மற்றும் பிரதேச சபையினர் வழங்கும் அறிவுரைகளை பின்பற்றி ஒவ்வொருவரும் அவதானமாக செயல்பட வேண்டும் என இவ்வேளையில் வேண்டி நிற்கின்றேன் என இவ்வாறு மன்னார் அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் இவ்வாற தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House