"சைவசமய வாழ்வியல் முறைமைகளில் இயற்கை மேலாண்மை"

சைவசித்தாந்த ஆய்வு நிறுவனம், காவேரி கலா மன்றம், யாழ்ப்பாணம் திரைப்படக்கல்லூரி மற்றும் தென்மராட்சிப் பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் பேராசிரியர் முனைவர் ச.மனோன்மணி தலைமையில் "சைவசமய வாழ்வியல் முறைமைகளில் இயற்கை மேலாண்மை" எனும் தொனிப்பொருளிலான ஆய்வரங்கம் இடம்பெற்றது.

நிகழ்வில் இணைத் தலைமைகளாக தென்மராட்சிப் பிரதேச செயலர் திருமதி உஷா சுபலிங்கம் மற்றும் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

பேராசிரியர் அ.சண்முகதாஸ், பேராசிரியர் முனைவர் ச.மனோன்மணி, பேராசிரியர் நா.ஞானகுமாரன், யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்துநாகரீகத்துறை தலைவர் சி.முகுந்தன், முதுநிலை விரிவுரையாளர் பொ.சந்திரசேகரம் ஆகியோர் ஆய்வரங்கத்தின் காலை அமர்வில் தமது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தனர்.

மேலும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சிவபூமி அறக்கட்டளை நிலையத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் ந.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாண மாவட்ட செயலக இந்து கலாசார உத்தியோகத்தர், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ் மாவட்ட இயக்குநர் கி.கந்தவேள், சூழலியலாளர் த.தமிழழகன், யாழ்ப்பாணம் திரைப்படக் கல்லூரி பணிப்பாளர் சு.சுதர்சன் மற்றும் காவேரி கலா மன்ற பொருளாளர் எஸ்.புத்திசிகாமணி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

ஆய்வரங்கில் பாடசாலை மாணவர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள் தேசிய கல்வியல் கல்லூரி மாணவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டு இயற்கை மேலாண்மை தொடர்பான அறிவினை வளர்த்துக்கொண்டனர்.

"சைவசமய வாழ்வியல் முறைமைகளில் இயற்கை மேலாண்மை"

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House