
posted 17th December 2021
வடக்கிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள நிலையில்நேற்று வியாழக்கிழமை (16.12.2021) காலை 8 மணியளவில் அரியாலை கடலட்டை பண்ணைக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தார்.
இதன் போது கடலட்டை பண்ணையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமொன்று பதிவானது. அங்கு நின்ற பனை மரத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதுதான் “பல்மேறா” என தெரிவித்த போது சீன தூதுவர் பனைமரம் தொடர்பில் வினவினார்.
இதில் ரொடி (கள்) கிடைக்கும். அற்ககோல் என சைகை மூலம் காண்பித்து இது உடம்புக்கு கேடு விளைவிக்காது என விளங்க படுத்தியபோது தூதுவர் அதற்கு ஹா ஹா என சிரித்த சம்பவம் இடம்பெற்றது.
அத்துடன் பனைமரம் சார் பல்வேறு சிறு கைத்தொழில் முயற்சிகள் உள்ளிட்ட வாழ்பாதாரத்துக்கான பொருளாதாரத்தை ஈட்டும் இயற்கையான வளம் பனை எனவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House