
posted 7th December 2021
அகில இலங்கை ரீதியில் இருவிருதுகளைப் பெற்று கிழக்கு மாகாணம் நிந்தவூரைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் ஹஸன் குத்தூஸ் முஹம்மட் ஜெம்ஷித் ஹஸன் சாதனை படைத்துள்ளார்.
நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவையின் உறுப்பினரும், இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின், பொறியியல் முகாமைத்துவ பீடத்தில் கடல் மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத்துறை முதலாம் வருட மாணவரான இவர்,
2020 ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் விருது போட்டியில், அம்பறை மாவட்டம், நிந்தவூர் பிரதேசத்தின் சார்பில் பங்கு பற்றினார்.
தமிழ்மொழி மூலத்தில் சிறுகதை மற்றும் கவிதை வரியாக்கம் ஆகிய இரு போட்டிகளிலும் மாவட்டம், மாகாணம் மற்றும் அகில இலங்கை ரீதியில் ஜெம்ஷித் ஹஸன் முதலாம் இடங்களைப் பெற்றுள்ளார்.
இதன் பேறாக அம்பாறை மாவட்டத்தினதும், பிறந்தகமான நிந்தவூர் மண்ணினதும் நாமத்தை ஒலிக்கச் செய்து பெருமை தேடித்தந்துள்ள இவர், கொழும்பு நெலும் பொக்குணவில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இளைஞர் விருது வழங்கல் விழாவில் தமக்கான இரு விருதுகளையும் பெற்றுக் கொண்டார்.
இவ்வாறு தேசிய ரீதியில் இரு விருதுகளைப் பெற்று சாதனை படைத்த தமது உறுப்பினரான ஜெம்ஷித் ஹஸனை நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவை பாராட்டி கௌரவித்துள்ளது.
பேரவையின் தலைவர் டாக்டர்.ஏ.எம்.ஜாபீர் தலைமையில், பொத்துவில் கொட்டுக்கல், “பீச்லகூன் பரன்” சுற்றுலா விடுதி மண்டபத்தில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது சாதனையாளர் ஜெம்ஷித் ஹஸன், பொன்னாடை போர்த்தி, நினைவுச்சன்னம் வழங்கி பேரவையால் கௌரவிக்கப்பட்டதுடன்.
பேரவை உறுப்பினர்கள் பலர் அவரை விதந்து பாராட்டியும் உரையாற்றினர்.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House