
posted 6th December 2021
43 இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க ஞாயிற்றுக்கிழமை (05.12.2021) கிளிநொச்சியில் மக்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.
கிளிநொச்சி, பரந்தனின் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து அழைக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடலில் அவர் ஈடுபட்டார்.
மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் குறிப்பாக பசளை, வீடு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் அவரிடம் கருத்து முன்வைத்தனர்.
அவற்றுக்குப் பதிலளித்த சம்பிக்க, குறித்த பிரச்சினைகள் தொட்பில் எழுத்து மூலமாகத் தருமாறும், அதற்குப் பொருத்தமானவர்களுக்குத் தகவலை வழங்கி, தீர்வு பெற்றுத் தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது பரந்தன் - சிவபுரம் பகுதிக்கும் சென்ற சம்பிக்க எம். பி. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் நேரில் பார்வையிட்டார்.
சம்பிக்க ரணவக்க நேற்று முன்தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் வந்திருந்தார். இதன்போது அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரங்களை ஆரம்பித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், கிளிநொச்சி வந்த சம்பிக்க ரணவக்க எம். பி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமாரை இன்று சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடல் ஞாயிற்றுக் கிழமை (05.12.2021) நண்பகல் 12 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் இடம்பெற்றது. இதன்போது குறித்த கலந்துரையாடல் தொடர்பில் செய்தி அறிக்கையிடுவதற்கு ஊடகங்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் உடனடியாகத் தெரியவரவில்லை.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House