
posted 28th December 2021

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்
இலங்கை இந்திய மீனவர்கள் தங்கள் கடல் பரப்பை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து சிறையில் வாடும் இரு நாட்டு மீனவர்களின் குடும்பங்களின் நலன் கருதி இரு நாட்டு மீனவர்களின் பரிமாற்றங்கள் மூலம் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய இரு நாட்டு அரசும் கவனம் செலுத்த வேண்டும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய கடல் எல்லைக்குள் சென்று மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களையும், இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன் பிடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது குடும்பங்களின் நன்மை கருதி, சிறையில் வாடும் இம் மீனவர்கள் பரிமாற்றங்கள் மூலம் பொது மன்னிப்பில் விடுதலை செய்வதற்கு இரண்டு நாட்டு அரசாங்கங்களும் முயற்சி எடுக்க வேண்டும்.
மேலும் இரண்டு நாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் ஒன்றும் வசதிபடைத்தவர்கள் அல்ல. அன்றாடம் கடலுக்குப் போய் மீன் பிடித்து அவர்களுடைய குடும்ப வாழ்வாதாரத்தை நடத்தி வருபவர்கள்.
குடும்பத்தைப் பாதுகாக்கும் குடும்பத் தலைவர்களாக உள்ள மீனவர்கள், நீண்ட காலம் சிறையில் இருப்பதால் அவர்களுடைய குடும்பங்கள் பாரிய வாழ்வாதார பிரச்சினைகளையும், குழந்தைகளின் கல்வி மற்றும் இதர சமூக பிரச்சனைகளையும் அவர்கள் எதிர்நோக்க வேண்டிவரும்.
எனவே இரண்டு நாட்டு அரசாங்கங்களும் கைது செய்துள்ள மீனவர்கள் தொடர்பாக கரிசனை மேற்கொண்டு, பேச்சுவார்த்தைகளை நடத்தி, மீனவர்களை நல்லெண்ண அடிப்படையிலும் பொது மன்னிப்பின் மூலம் பரிமாறிக்கொண்டு, மீனவர்களை அவர்களது குடும்பத்தோடு இணைந்து வாழ்வதற்கு வழி செய்ய வேண்டும்.
அத்துடன் இனியும் இவ்வாறான அத்துமீறல் நடவடிக்கைகளை மீனவர்கள் செய்யாது இருப்பதற்கு நிரந்தரமான ஒரு தீர்வையும் இரண்டு நாட்டு அரசாங்கங்களும் எடுக்க வேண்டும் என்றும் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேட்டுக் கொண்டார்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House