கோவிட் தொற்று அப்டேற் (05.12.2021) - மன்னார்

மன்னார் மாவட்டத்தில் இம் மாதம் (டிசம்பர்) இதுவரை 57 நபர்கள் கொவிட் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர். ஆனால் 05.12.2021 மட்டும் 6 கொவிட் தொற்று இனம் காணப்பட்டுள்ளது என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிக்கை தெரிவித்துள்ளது.

5 ந் திகதி (5.12.2021) பி.சி.ஆர் மூலம் இனம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் விபரங்கள்;

விடத்தில்தீவு வைத்தியசாலை 2

எருக்கலம்பிட்டி வைத்தியசாலை 2

தலைமன்னார் வைத்தியசாலை 1

பேசாலை வைத்தியசாலை 1

இம் மாதம் (டிசம்பர்) 5 ந் திகதி வரை 57 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிக்கை மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் ஆரம்ப முதல் மன்னார் மாவட்டத்தில் இதுவரை 2990 நபர்கள்
கொவிட் - 19 தொற்றாளர்களாக பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 29 கொவிட் தொற்றாளர்கள் மன்னாரில் மரணித்துள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் (டிசம்பர்) 513 அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவரின் அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

கோவிட் தொற்று அப்டேற் (05.12.2021) - மன்னார்

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House