கொலை செய்த சந்தேக நபர்கள் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிளிநொச்சி பூநகரி பகுதியில் இளைஞர் ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்பு பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட 4 பேர் பூநகரி போலீசாரால் நேற்று (27-12-2021) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்

பூநகரி கௌதாரிமுனை கடற்பரப்பில் நேற்று முன்தினம் (26-12-2021) பிற்பகல் சுற்றுலா சென்றிருந்த இளைஞர் ஒருவர் மீது அதே பகுதிக்கு படகின் மூலம் குருநகர் பகுதியில் இருந்து வந்த குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்

குறித்த கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் இன்று இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வந்த பூநகரி பூநகரி பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பூநகரி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சதுரங்க தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் பிரதான சந்தேக நபர் மற்றும் ஒரு பெண் உள்ளடங்கலாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பூநகரி பொலிஸ் நிலையம் கொண்டு வரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் குறித்த நான்கு சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசர் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்த சந்தேக நபர்கள் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House