
posted 13th December 2021
கிழக்கிலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் கடந்த சில தினங்களாக காற்றுடன் கூடிய அடை மழை பெய்த வண்ணமுள்ளது.
இந்த கால நிலை மாற்றமும், பெருமழையும் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இரவு பகலாக தொடர்ந்தும் மழை கொட்டித் தீர்த்த வண்ணமுள்ளதால் மக்கள் வெளிநடமாட்டங்களைத் தவிர்க்கும் நிலையுடன், தொழில் பாதிப்புகளையும் எதிர்நோக்கியுள்ளனர்.
மேலும் மழையுடன் கூடிய காலநிலை சீர்கேடு காரணமாக கரையோரப்பிரதேசங்களில் கடல் பெருக்கத்துடன், கடல் சீற்றமும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடல் மீன்படி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குறிப்பாக கரைவலை மீன்பிடியும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலமையால் கடல் மீனுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள அதேவேளை வெளி மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்படும் மீனுக்கு திடீர் விலை உயர்வும் ஏற்பட்டு பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் அன்றாட தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமன்றி மரக்கறி வகைகள் மற்றும் உள்ளுர் உற்பத்தி மரக்கறி வகைகளுக்கும் விஷம் போல் விலைகள் ஏறியுள்ள நிலையில் சாதாரண மக்கள் பெரும் கஷ்ட நிலமைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரிசி, சீனி உள்ளிட்ட 50 வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி ச.தொ.ச. மூலம் குறைந்த விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ளார்.
ஆனாலும் இன்றைய அரசு ஆட்சிக்கு வந்ததும் கிழக்கு மாகாணத்தின் தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் இயங்கி வந்த ச.தொ.ச. கிளைகள் பலவற்றை மூடிவிட்ட நிலையில் எவ்வாறு பயனைப் பெற முடியுமென பல பிரதேச மக்களும் அங்கலாய்க்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House