கிணற்றில் நீராட பாய்ந்த சிறுவன் சடலமாக மீட்பு

வவுனியா கொக்குவெளி பகுதியில் கிணற்றில் நீராடச்சென்ற சிறுவன் காணாமல் போன நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார்.

வவுனியா கொக்குவெளி பகுதியில் அமைந்துள்ள தோட்டக்கிணற்றில் நீராடுவதற்காக சிறுவன் ஒருவன் நேற்று குதித்துள்ளார். அந்த சிறுவன் அந்தப்பகுதியில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்ததுடன், கிணற்றில் குளிக்க செல்வதாக அருகில் இருந்த இளைஞர்களிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் தனது ஆடைகளை கழற்றி கிணற்றின் அருகில் வைத்துவிட்டு கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதனை அவதானித்த அவரின் நண்பர்கள் கிணற்றுக்குள் சென்றுபார்த்தபோது, அந்த இளைஞரை காணவில்லை. இதையடுத்து ஊர்மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற கிராமத்தவரகள் கிணற்றினுள் இறங்கி தேடுதல் நடத்திய நிலையில் நீண்ட நேரமாகியும் குறித்த சிறுவனை மீட்க முடியவில்லை.

எனினும் கிராமமக்களின் தொடர்சியான முயற்சியால் கிணற்றுநீர் வெளியில் இறைக்கப்பட்டு இரவு 11.30 மணியளவில் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.

இந்த சம்பவத்தில் அகிலேஸ்வரன் தனுசன் என்ற 16 வயது சிறுவனே மரணமடைந்தார்.

சம்பவம் தொடர்பான விசாரனைகளை மாமடு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கிணற்றில் நீராட பாய்ந்த சிறுவன் சடலமாக மீட்பு

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House