கரை ஒதுங்கிய  6 உடல்களை பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டும் - எம்.ஏ.சுமந்திரன்

யாழ்.குடாநாட்டு கரையோரங்களில் 6 நாள்கள் இடைவெளியில் கரை ஒதுங்கிய 6 உடல்களை பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். குடாநாட்டு கடல் பரப்பில் கடந்த 27ஆம் திகதி முதல் 2ஆம் திகதிவரை 6 உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. அவை பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, நெடுந்தீவு, கட்டைக்காடு, சக்கோட்டை, வெற்றிலைக்கேணி ஆகிய இடங்களில் கரை ஒதுங்கின.

இவ்வாறு கரை ஒதுங்கிய உடல்கள் தற்போது அரச வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளபோதும் எந்தவொரு சட்ட நடவடிக்கையோ அல்லது அது தொடர்பான ஆய்வுகள் எவையும் மேற்கொள்ளப்படாதமை கடும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் கடத்தல்கள், கொலைகள், காணாமல் ஆக்கப்படுதல் என்னும் திணிப்புகளை கண்டமையால் இயல்பாகவே ஏற்படும் பதற்றம் தவிர்க்க முடியாதது.

இதனால் மீட்கப்பட்ட உடல்களில் ஒரு உடலையேனும் பகுப்பாய்வுக்கும் உடற்கூற்று பரிசோதனையுடன் மரபணுப் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கரை ஒதுங்கிய  6 உடல்களை பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டும் - எம்.ஏ.சுமந்திரன்

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House