
posted 12th December 2021
கடலில் தங்கள் படகின் வெளிக்கள இயந்திரத்தை பரீட்சித்து பார்க்கும் நோக்குடன் ஒரு படகில் சென்ற மூன்று மீனவர்களில் இருவர் கடலில் மூழ்கிய நிலையில் தேடுதல் இடம்பெற்று வருகின்றது. மற்றைய மீனவர் படகுடன் கரை சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் மன்னார் கோந்தப்பிட்டி கடல் பரப்பில் ஞாயிற்றுக்கிழமை (12.12.2021) நண்பகல் வேளையில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக ஆரம்ப விசாரனையில் தெரிவிக்கப்படுவதாவது, யாழ் பருத்தித்துரையைச் சார்ந்த மீனவர்கள் மன்னார் நகர் பகுதியில் அமைந்துள்ள கோந்தப்பிட்டி என்ற பகுதியில் தூண்டில் மூலம் தொழில் புரிந்து வருபவர்கள் எனவும், சம்பவம் அன்று ஞாயிற்றுக்கிழமை (12.12.2021) நண்பல் வேளையில் இவர்கள் தங்களின் வெளிக்கள படகின் இயந்திரத்தை பரீட்சித்து பார்க்கும் நோக்குடன் கோந்தப்பிட்டி கடற்பரப்பில் மூன்று மீனவர்கள் ஒரு படகில் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இச் சமயம் இப் பகுதியிலுள்ள கால்வாய் பகுதியில் சென்று கொண்டிருந்தபொழுது படகின் இயந்திரம் பழுதடையவே இதில் சென்ற மீனவரில் ஒருவர் கரைக்கு வந்து மெசின் சாவியை எடுத்து வருவதற்காக கடலில் பாய்ந்து கரைக்குவர எத்தணித்த வேளையில் கடல் சுழிக்குள் அகப்பட்டு தத்தளித்துள்ளதாகவும், இதை கண்ணுற்ற மற்றைய மீனவர் இவரை காப்பாற்ற தானும் கடலில் குதித்து சக மீனவரை காப்பாற்ற எத்தணித்த வேளையில் அவரும் கடல் சுழிக்குள் அகப்பட்ட நிலையில் இருவரையும் காணாத நிலையில் கடற்படை, மன்னார் பொலிசார் மற்றும் சக மீனவர்கள் இவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மற்றைய மீனவர் படகுடன் கரை சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் தேடப்பட்டு வரும் மீனவர்கள் தர்சன் மற்றும் செந்தூரன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House