கடலரிப்பு

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களான சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள பாரிய கடலரிப்பு காரணமாக இயற்கை மற்றும் கடற்றொழில் வளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வட கீழ் பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பித்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்ட கடல் பரப்பில் ஏற்பட்டுள்ள கடற்கொந்தளிப்பு காரணமாக சாய்ந்தமருது முகத்துவாரம் தொடக்கம் மாளிகைக்காடு மையவாடி வரையிலான பகுதியில் இவ்வாறு பாரிய கடலரிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதனால் இன்றைய தினம் (14) சில வாடிகளும் வலைகள் மற்றும் உபகரணங்களும் கடல் அலைகளினால் காவு கொள்ளப்பட்டுள்ளதுடன் பல தென்னை மரங்களும் கடலுக்கு இரையாகியுள்ளன. அத்துடன் வீதியொன்றும் முற்றாக சேதமடைந்துள்ளது. சாய்ந்தமருது சிறுவர் பூங்கா, மீனவர் நூலகம் என்பனவும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.

இந்த நிலைமையினால் இப்பகுதியில் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீனவர்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்து நிர்க்கதியடைந்துள்ளனர்.

கடந்த வருடம் ஏற்பட்ட கடலரிப்பு காரணமாக மாளிகைக்காடு மையவாடி சுவர்கள் இடிந்து வீழ்ந்து, அடக்கம் செய்யப்பட்டிருந்த ஜனாஸாக்களின் உடற்பாகங்களும் வெளிவருகின்ற நிலைமை ஏற்பட்டதையடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் சுமார் 14 மில்லியன் ரூபா செலவில் கரையோரம் பேணல் திணைக்களத்தினால் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடலரிப்பு

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House