
posted 1st December 2021
மாதகல் கிழக்குப் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி நேற்று தடுத்து நிறுத்தப்பட்டது.
மாதகல் கிழக்கு ஜே/150 கிராம உத்தியோகத்தர் பிரிவு, குசுமந்துறையில் தனியாருக்கு சொந்தமான 1 பரப்புக் காணியை கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக நில அளவை திணைக்களத்தினால் நேற்று செவ்வாய்க்கிழமை அளவீட்டுப் பணி முன்னெடுக்கப்படவிருந்தது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் கடற்படையினர் தமது வீட்டுக்கு வந்து காணியை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்து கையொப்பம் வைக்குமாறு கேட்டனர் எனக் காணி உரிமையாளர் தெரிவித்தார்.
அளவீட்டுப் பணியை தடுத்து நிறுத்துவதற்காக குறித்த இடத்தில் ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்போது கடற்படையினர் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டு , மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டனர்.
காணியை அளப்பதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதை அடுத்து அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிட்டு நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் அவ்விடத்தில் இருந்து அகன்றனர்.
தொடர்ந்தும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் கிராம மக்கள் கடற்படை முகாமுக்கு முன்பு அமர்ந்து இருந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதை அடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த இளவாலை பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலந்துரையாடினர்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் இரண்டாம் திகதி சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் அழைந்து கலந்துரையாடுவதாக வாக்குறுதி வழங்கியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House