
posted 15th December 2021
இலங்கையின் பிரபல வங்கிகளுள் ஒன்றான ஹற்றன் நஷனல் வங்கி, இலங்கை மத்திய வங்கியின் அனுசரணையுடன் அறிமுகப்படுத்தியிருக்கும் “சோலோபொடி பொல” எனும் சிறு வியாபாரத்திட்ட அங்குரார்ப்பண அறிமுக நிகழ்வு நிந்தவூர் ஹற்றன் நஷனல் வங்கிக் (HNB) கிளையில் சிறப்பாக நடைபெற்றது.
“சோலோ சிறு வியாபாரம்” எனும் கருப்பொருளுடனான மேற்படி அறிமுக நிகழ்வுக்கான ஏற்பாடுகளை வங்கிக் கிளையின் முகாமையாளர் நடராஜா நந்தகோபன் சிறப்புற ஏற்பாடு செய்திருந்ததுடன், அவரது தலைமையிலும் நிகழ்வு வங்கியில் நடைபெற்றது.
அந்த வகையில் ஹற்றன் நஷனல் வங்கியின் பக்க பலத்துடன், தமது தொழில் முயற்சியினை மிகவும் சிறப்பான முறையில், மக்கள் பயன்பெறும் வகையில் முன்னெடுத்துவரும் “ரீமா பிஸ்கற்” (Teemah Biscuit) உற்பத்தி நிறுவனத்தினர், மேற்படி செயலி ஊடாக தமது வியாபார நடவடிக்கைகளை நிகழ்வின் போது உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
இந்த அறிமுக அங்குரார்ப்பண நிகழ்வுக்கு தலைமை வகித்து உரையாற்றிய வங்கி முகாமையாளர் நடராஜா நந்தகோபன் சோலோ சிறு வியாபார செயலி தொடர்பாக விளக்குகையில் பின்வருமாறு கூறினார்.
“உலகளாவிய ரீதியில் அதிவேகமான தொழிநுட்ப முன்னேற்றத்துடன் விரைவான மாற்றங்களை வங்கித்துறையும் உள்வாங்கி வருகின்றது. அவ்வகையில் இலங்கையிலும் மத்திய வங்கியின் அனுசரணையுடன் லங்கா கியூஆர் என்னும் புதிய பரிமாற்ற நடவடிக்கை முறைமைக்கமைய எச்.என்.பி அறிமுகப்படுத்தியிருக்கும் தொலைபேசி வாயிலான நவீன செயலியே எச்.என்.பி சோலோ (HNB Solo) என்பதாகும்.
நேரடியான பணத்தாள்கள் ஊடான அல்லது ஏ.ரி.எம். (ATM) அட்டைகளுடான பணப்பரிமாற்றத்தினை தவிர்த்து இலத்திரனியல் ஊடான பணப்பரிமாற்ற வளர்ச்சிக்கு வாடிக்கையாளர்களை பழக்கப்படுத்தி அதனூடான பிரதிபலன்களை மக்களுக்கு தெரியப்படுத்தி அவர்களை ஊக்குவிப்பதற்கு எங்களது வங்கியால் செயற்படுத்தப்படும் ஓர் சிறப்பு நிகழ்ச்சியே இதுவாகும்.
எங்களது இந்த எச்.என்.பி. சோலோ செயலி ஊடாக, எச்.என்.பி (HNB) மற்றும் ஏனைய வங்கிகளில் கணக்குகள் மற்றும் ஏ.ரி.எம். (ATM) அட்டைகளையும் இணைத்து கொள்வதுடன் நேரடியான கட்டணக்கொடுப்பனவுகள், தொலைபேசி, மின்சாரம் போன்ற பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய பல அனுகூலங்களையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
எதிர்வரும் வாரங்களிலும் பல்வேறுபட்ட சுயதொழில் முயற்சியாளர்கள் மற்றும் வணிகத்துறையினரின் பங்குபற்றலுடன் எச்.என்.பி. சோலோ (HNB Solo) செயலி ஊடான வியாபார நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House