உடுத்துறை சுனாமி பொது நினைவாலயத்தில் ஆறுதல் வார்த்தைகள்

தமிழ்மக்களாகிய நாம் பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து வந்துள்ளோம். இருப்பினும் மனத்தைரியம், பக்குவம் எங்களிடம் இருக்கிறது. இதனால் எல்லாவற்றையும் கடந்து இம் மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

சுனாமிப்பேரலையால் காவுகொள்ளப்பட்டோரின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி பொது நினைவாலயத்தில் நடைபெற்ற போது அவர் கலந்து கொண்டு ஆறுதல் வார்த்தைகளை வழங்கினார்.

அவர் மேலும் பேசுகையில் நெருக்கடிகள், சுமைகளுக்கு மத்தியிலும் பேரலையில் அள்ளுண்டவர்களின் நினைவுகள் எம்மிடம் இருக்கிறது. அவர்களின் ஆன்மாசாந்தியடைய இன்றையநாள் அவர்களை ஆற்றுப்படுத்தும் நாள். இந்த ஆற்றுப்படுத்தலில் பேரலையால் அள்ளுண்ட ஆத்மாக்களுக்காக மன்றாடுகின்றோம் என்றார்.

முன்னாள் வடமாகாணசபை, பாராளுமன்ற உறுப்பினருமான எம் கே.சிவாஜிலிங்கம் பேசுகையில் சுனாமிப்பேரலை அனர்த்தத்தில் இலங்கையில் மொத்தமாக 40ஆயிரம்பேரும், அதில் வடகிழக்கில் 25ஆயிரம் பேரும் உயிரிழந்தனர். அவ்வேளை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நானும், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கமும் சேர்ந்து ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்காவைச் சந்தித்து பாதிக்கப்பட்டோர்களுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தோம். அவர் அதனை ஏற்று பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவை அழைத்து பாதிக்கப்பட்டோருக்கு இனமத மொழி பேதமின்றி அனைவருக்கும் நிவாரணம் வழங்குமாறு பணிந்திருந்தார்.

பேரலையால் பாதிக்கப்பட்டோர்களுக்கு புதிய கட்டுமானம் ஒன்றை உருவாக்க அரகம் - புலிகளும் இணைந்து செயற்பட தயாராக இருந்த வேளை அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதால் சுனாமிப் பேரலை கட்டுமானப்பணி நிறைவேறவில்லை. பேரலையால் பாதிக்கப்பட்டவர் இன்னமும் வீடுகள் இன்றி இருக்கிறார்கள். அவர்களுக்கான வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க மக்கள் பிரதிநிதிகள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

உடுத்துறை கடற்றொழிளாளர் சங்கத்தில் ஏற்பாட்டில் சுனாமி நினைவுக்குழுவைச் சேர்ந்த கிராம சேவையாளர் வி. தவராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் எஸ். பிரபாகரமூர்த்தி, வடமராட்சி ஈ.பி.டி.பி அமைப்பாளர் ஐ. ஸ்ரீரங்கேஸ்வரன், பொது ஜன பெர முன்னனி யாழ் .மாவட்ட இணைப்பாளர் எஸ். ராஜிவ் , நினைவாலயத்திற்கு காணி அன்பளிப்பு அர்பணிப்புச் செய்த ஒய்வு நிலை உதவி அரச அதிபர்கள். புத்திரசிகாமணியின் பாரியார் ஜெயசோதிஆகியோரும்உரை ஆற்றினார்கள்.

உடுத்துறை சுனாமி பொது நினைவாலயத்தில் ஆறுதல் வார்த்தைகள்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House