
posted 12th December 2021

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி வந்துகொண்டிருந்தரயில் வவுனியாவில் முச்சக்கர வண்டியை மோதியது. இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதி பாய்ந்தமையால் மயிரிழையில் உயிர் தப்பினார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.45 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பில் இருந்து யாழ். நோக்கி சென்ற கடுகதி புகையிரதமானது தாண்டிக்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது குறித்த பகுதியில் இருந்த பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தால், சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு முச்சக்கர வண்டி இழுத்துச் செல்லப்பட்டதுடன், அது முழுமையாக சேதமடைந்துள்ளது. முச்சக்கர வண்டி சாரதி அதிலிருந்து பாய்ந்தமையால் மயிரிழையில் உயிர் தப்பினார். இந்த விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, குறித்த பாதுகபாப்பற்ற புகையிரதக் கடவையில் பல தடவைகள் விபத்துக்கள் ஏற்பட்டிருந்தமையும், உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
வவுனியாவில் நடைபெற்றது
வவுனியா, புளியங்குளம் பகுதியில் டிப்பர் – சைக்கிளை மோதி ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;
வவுனியா, புளியங்குளம் இராமனூர் பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு அண்மையில் வீதியோரமாக சைக்கிளில் சென்றவரை அதே வழியில் வந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது.
இவ்விபத்தில் டிப்பர் வாகனத்தின் கீழ் பகுதியியில் சைக்கிள் சிக்குண்டதுடன், அதனை செலுத்திச் சென்றவர் காயங்களுடன் உயிர்தப்பினார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House