இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இலங்கை பணியாளர்கள் கௌரவிப்பு
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இலங்கை பணியாளர்கள் கௌரவிப்பு

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றிவரும் இலங்கை பிரஜைகள் பலரை, அவர்களுடைய அர்ப்பணிப்புடனான நீண்டகால சேவையை அங்கீகரிக்கும் வகையில் தூதுவர் கோபால் பாக்லே, தூதரகத்தால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த விசேட நிகழ்வொன்றில் கௌரவித்தார்.
30 வருடங்களுக்கும் அதிக காலமாக சேவையாற்றிவரும் திருமதி மாலா கமகே மற்றும் நெய்ல் ஜோசப் ரெஜிஸ் ஆகிய இருவருக்கும் இந்தியாவுக்கான இருவழி விமான ரிக்கெட்டுக்களும் இந்திய பயணத்துக்கான விசேட பணக்கொடுப்பனவும் வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன் திருமதி ஷிரானி ஶ்ரீதரன், திருமதி சுஜாதா ஹெட்டியாராச்சி, திருமதி நிரஞ்சலா மனோரி ஜோசப் மற்றும் திருமதி லக்‌ஷி சமரவிக்ரம ஆகியோருக்கு அண்மையில் பதவி உயர்வும் வழங்கப்பட்டது.

தூதரகத்தில் அதிசிறந்த சேவையை வழங்கிவருகின்றமைக்காக இலங்கையைச் சேர்ந்த அலுவலர்களுக்கு தூதுவர் நன்றி தெரிவித்தார்.
குறிப்பாக இலங்கையில் அபிவிருத்தி ஒத்துழைப்பு, பயணங்கள், வர்த்தகம் மற்றும் வியாபாரம் போன்ற மக்களுடன் நேரடியான தொடர்பைக்கொண்டுள்ள விடயங்களில் இந்திய-இலங்கை உறவுகளை வலுவாக்கும் நோக்கத்துக்கு தூதரகத்துக்கான அவர்களின் பங்களிப்பு ஆதரவாக அமைந்தது என தூதுவர் குறிப்பிட்டார்

தூதரக அலுவலர்களில் கிட்டத்தட்ட 50 வீதமானவர்கள் இலங்கைப் பிரஜைகளாக உள்ளனர். இதேபோல அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகங்களிலும் கண்டியில் உள்ள இந்தியத் துணை தூதரகத்திலும் கணிசமான அளவிலான அலுவலர்கள் உள்ளூரிலிருந்து பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளினதும் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் பல்வேறு சமூகங்கள், மொழிகள், கலாசாரப் பின்னணிகளைச்சார்ந்தவர்களாக அவர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இலங்கை பணியாளர்கள் கௌரவிப்பு

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House