அன்பையும், பகிர்வையும் கற்றுக் கொடுக்கும் கூடம்தான் பாலன்குடில்
அன்பையும், பகிர்வையும் கற்றுக் கொடுக்கும் கூடம்தான் பாலன்குடில்

பாலன்குடில் ஒரு வெறும் குடில் அல்ல மாறாக அது ஒரு கூடம். எவ்வாறு நாம் ஒரு பள்ளிக்கூடத்தை அண்டி பலவற்றை கற்றுக் கொள்வதுபோல இந்த குடிலிலும் நாம் பலவற்றை அதாவது அன்பையும் பகிர்வையும் கற்றுக் கொடுக்கும் கூடமாகவே இது அமைந்துள்ளது என அருட்தந்தை ஞாணப்பிரகாசம் அடிகளார் இவ்வாறு தனது மறையுரையில் தெரிவித்தார்.

கிறிஸ்துமஸ் விழா அன்று மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்கில் நடுச்சாம திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுத்து மரையுரையாற்றுகையில் பங்கு தந்தை அருட்தந்தை ஞாணப்பிரகாசம் அடிகளார் தொடர்ந்து தெரிவிக்கையில்

மனுக்குலத்தின் ஏக்க பெருமூச்சின் இறுதி வெளிப்பாடே கிறிஸ்து பிறப்ப விழா. கற்பனைகளில் கோட்டை கட்டாது எதார்த்தத்தில் குடிசை கட்டவே இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்.

வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வு வரலாற்றையே மாற்றி அமைத்தது என்றால் அது கிறிஸ்து பிறப்பு விழா மட்டுமே.

ஆதி பெற்றோரின் பாவத்தால் கறைப்பட்ட வரலாறு கிறிஸ்துவின் பிறப்பால் அது தூய்மை பெற்றது.

எங்கே நிம்மதி என ஏங்கி தவித்த மனித குலத்துக்கு அமைதியின் தூதுவனாக உதயமானவர்தான் இயேசு கிறிஸ்து.

இவர் வியத்தகு ஆலோசகர் வல்லமையுள்ள இறைவன் முடிவில்லா தந்தை அமைதியின் அரசருமாவார்.

இவர் எமக்கு காட்டும் வழி அன்பு பகிர்வு மகிழ்வு. இவற்றுக்கு எம்மை அர்ப்பணிக்கும் புனிதமான நாள்தான் இந்த கிறிஸ்து பிறப்பு விழா.

நாம் இந்நாட்களில் வீடுகளில் பாலன்கூடுகள் அமைத்துள்ளோம். இந்த குடிலின் மூலம் நாம் கிறிஸ்துவின் பிறப்பை பறைசாற்றுகின்றோம்.

இது வெறுமனே குடில் அல்ல மாறாக இது ஒரு கூடம். எவ்வாறு நாம் ஒரு பள்ளிக்கூடத்தை அண்டி நாம் பலவற்றை கற்றுக் கொள்வதுபோல இந்த குடிலிலும் நாம் பலவற்றை கற்றுக் கொள்ளுகின்றோம்.

ஆகவேதான் இது ஒரு வெறும் குடில் அல்ல இது ஒரு கூடமாக அமைகிpன்றது. அன்பையும் பகிர்வையும் கற்றுக் கொடுக்கும் கூடமாகவே இந்த கிறிஸ்து பிறப்பு கொட்டிலாக அமைந்துள்ளது.

சுயநலத்தை துறந்து பிறர் நலத்தை தாங்கிச் செல்ல விண்ணக்திலிருந்து வந்த உண்மையின் விழாதான் இந்த விழா.

ஆகவே இந் பூமியில் விடிவெள்ளியான இயேசுவை தமதாக்கிக் கொள்ள அழைக்கின்றது இந்த விழா.

அவரின் அன்பு பகிர்வு மகிழ்வு நமது உறவுகளில் பிரதிபலிக்க வேண்டும் என்று இவ்விழா இன்று எம்மை அழைத்து நிற்கின்றது.

இயேசு எங்கே பிறக்க விரும்புகின்றார் என்றால் ஏழ்மையின் தோழமையில் பிறக்க விரும்புகின்றார்.

அழகிய தோற்றங்களில் அல்ல மாறாக அன்புள்ளங்களிலேயே இயேசு பிறக்க விரும்புகின்றார்.

பகிர மறுக்கும் இதயங்களில் அல்ல பகிர்ந்து வாழும் பாச உள்ளங்களிலேயே இயேசு பிறக்க விரும்புகின்றார்.

இன்றைய காலக்கட்டத்தில் பாசம் இழந்து நிற்கின்ற குடும்பங்களிலும் உறவுகளிலும் இதயங்களிலும் இயேசு பிறக்க விரும்புகின்றார் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இறை இயேசுவில் நம்பிக்கை கொண்ட ஒவ்வnருவருக்கும் கடவுளின் உரிமையை வழங்குகின்றார்.
கடவுள் தனது ஒரேபேரான திருமகனை இவ்வுலகிற்கு அனுப்பி எம்மை மீட்டுக் கொண்டார்.

ஆகவே இறைமகன் எம்மிடம் எதிர் பார்ப்பதை நாம் செயல்வடிவம் கொடுக்க நாம் முன்வர வேண்டும். பசாசின் பிடியிலிருந்து நாம் விடுபட்டவர்களாக இயேசுவுக்காக சான்று பகிர இந்த கிறிஸ்து பிறப்பு விழா எம்மை அழைத்து நிற்கின்றது என அருட்தந்தை ஞாணப்பிரகாசம் அடிகளார் இவ்வாறு தனது மறையுரையில் தெரிவித்தார்.

அன்பையும், பகிர்வையும் கற்றுக் கொடுக்கும் கூடம்தான் பாலன்குடில்

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House